Monday , August 24 2026

வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ – 

அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா

வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ – 

அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா
இந்திய சினிமாவில் உள்ள சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன் .வார் 2 டீசரில் அவரின் வசீகரமான திரை ஈர்ப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.பிளாக்பஸ்டர் படங்களை  மட்டுமே வழங்கி வரும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்த யுனிவர்ஸில் வார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹிருத்திக் ஸ்பை வேடத்தில் நடித்துள்ளார்.

வார் 2 படத்தின் ஆடை வடிவமைப்பாளர் அனைதா ஷ்ராஃப் அடஜானியா கூறுகையில் “யாஷ் ராஜ் பிலிம்ஸ் வார் 2 டீசரை வெளியிட்ட பின்னர் ஹிருத்திக் ரோஷனின் தோற்றம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .ஹிருத்திக்கின் இந்த காந்த ஈர்ப்பு மேலும் ரசிகர்களை  கவரும் “என்று கூறியுள்ளார் .

மேலும் அனைதா கூறுகையில் , “ கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து ஹிருத்திக்குடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தூம் 2, பேங் பேங் மற்றும் எண்ணற்ற தோற்றங்கள் மற்றும் விளம்பரங்கள்,  அதையடுத்து  வார் படம் வந்தது. ஒவ்வொரு படத்திலும் புதிதாக மற்றொரு புதிய லுக்கை கொண்டு வந்தோம் . ஆனால் வார் 2 படம் மூலம், நாங்கள் அவருக்கு ஒரு சிறப்பான ,நேர்த்தியான தோற்றத்தை உருவாக்கினோம். அது இன்னும் ஒரு சூப்பர் ஹீரோவைப் போல இருந்தது .

வார் 2 படத்திற்காக கபீரின் கதாபாத்திரத்தின் ஆழமான, இருண்ட மனநிலையை ஆராய்வது அவசியமாக  இருந்தது .இந்தப் படத்தில் அவர் பல தன்மைகளை கொண்டவர்.உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, பார்வை ரீதியாகவும் கூட . கபீரின் கூர்மையான தோற்றம் எப்போதும் தனித்து தெரியும்.

அனைதா மேலும் கூறுகையில், “நாங்கள் வார் 1 இல் ஹ்ரித்திக்கின் தோற்றத்திற்கு கிடைத்தை வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு அந்த மாற்றத்தை ஏற்படுத்திய முடி வெட்டு, ஹ்ரித்திக்கின் கவர்ச்சிகரமான ஆளுமையை முன்னெடுத்து  இந்த படத்தில் புதிய தோற்றத்தை உருவாக்கினோம் .இந்த தோற்றம், மனோபாவம், கட்டுப்பாடு ஆகியவற்றின் கலவையே வார் 2 இல் இந்த கபீரை உண்மையாக உருவாக்கியது என்று நான் நினைக்கிறேன்.” என இவ்வாறு கூறியுள்ளார் .

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார் . கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். வார் 2 இவ்வருட ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

About Publisher

Check Also

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 …