Thursday , April 24 2025

50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 6-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என அனுமதித்துள்ள தமிழக அரசு, கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி என பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

Image

About Publisher

Check Also

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ‘விட்ஃபா’ முதல் மாநாடு!

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ‘விட்ஃபா’ முதல் மாநாடு! ’விட்ஃபா’ அமைப்பும், அதன் நோக்கமும் திரையுலகத்திற்கு நன்மை செய்யும் – பிரபலங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *