Thursday , April 16 2026

கன்னித் தீவு நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நையாண்டி நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 தொடர் இந்த வார இறுதியில் கிங் ஜல்சாவின் சிரிப்பு கலவரத்தில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பல்வேறு நகைச்சுவையான திருப்பங்களுடன் பல கண்கவர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியாக புகழ்பெற்ற காமெடி நடிகர் ரோபோ சங்கர் வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 8, 2021 அன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்கிறார்.

இந்த வார நிகழ்ச்சி நீங்கள் முன் எப்போதும் பார்த்திராத வகையில் நீங்கள் சிரித்து சிரித்து உங்கள் விலா எலும்புகளை நோகச்செய்யும் என்பது உறுதி. இதன் 3 சிறப்பம்சங்கள் வருமாறு:-

சிரிப்பதற்காக மட்டுமே
இந்த வார இறுதியில், நகைச்சுவை, நையாண்டி, மிமிக்ரி ஆகியவை நிறைந்த நகைச்சுவைத் தொடருக்கு தயாராகுங்கள். ஜல்சா மன்னர் (ரோபோ சங்கர்), ராஜமாதா (ஷகீலா), பேபி மாதா (மதுமிதா), ராஜகுரு (திண்டுக்கல் சரவணன்) மற்றும் இதேபோல் கன்னி தீவில் உள்ள மற்றவர்கள் செய்யும் முட்டாள்தனமான செயல்களை பார்த்து ரசியுங்கள்.

கேளிக்கை விளையாட்டுகள்
கன்னித் தீவில் உள்ள மக்களுக்காக ஜல்சா மன்னர் ஜலாம்பிக்ஸ் என்னும் விளையாட்டு போட்டியை நடத்துகிறார். இதில் தடகளப் போட்டியில் இருந்து கயிறை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுகள் வரை, வரவிருக்கும் நிகழ்ச்சி அற்புதமான விளையாட்டுகளால் நிரம்பியுள்ளது. இது பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். இத்துடன் மட்டுமல்லாமல் மேலும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளது. இதில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் அமுதவாணன் ஒரு துள்ளல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கிறார்.

சிறப்பு விருந்தினர்
விலா எலும்புகளை நோகச் செய்யும் கன்னித் தீவின் இந்த வார நிகழ்ச்சியில் அழகான சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்கிறார். இந்த சிறந்த நடிகை, ஜல்சா மன்னருடன் நகைச்சுவையான உரையாடலில் ஈடுபடுவதையும், தீவின் குடிமக்களுடன் வேடிக்கையாக உரையாடுவதையும் பார்க்கலாம்.
இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்து நான் நிறைய சிரித்தேன். மேலும், மன்னர் ஜல்சாவின் தெய்வீக ஆசீர்வாதங்களைத் தேடுவது வேடிக்கையான அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இது ஒரு தனித்துவமான மற்றும் புதிய கருத்தாக்கத்துடன் கூடிய ஒரு நல்ல நிகழ்ச்சி ஆகும். சிறந்த நகைச்சுவை நிறைந்த இந்த தொடர் முழு குடும்பத்தினரும் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும் என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை 8 ஆகஸ்ட் 2021 அன்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்வதன் மூலம் கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருங்கள்.

About Publisher

Check Also

HDFC ERGO successfully conducts 3rd edition of State Insurance Quiz Junior Grand Finale in Tamil Nadu and Puducherry

HDFC ERGO successfully conducts 3rd edition of State Insurance Quiz Junior Grand Finale in Tamil …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *