Sunday , June 21 2026

செம்பருத்தி கார்த்திக்கு பதில் ஹீரோவாகும் குக் வித் கோமாளி பிரபலம்…? குழப்பத்தில் ரசிகர்கள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கடைத்துள்ளது

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.

புதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.புதிய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த தொடரில் முக்கிய வேதமான ஐஸ்வர்யா என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி அசோக் குமார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஜனனி அசோக் குமார் திடீரென்று நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வண்ணம் இந்த தொடரின் நாயகன் கார்த்திக் ராஜ் இந்த தொடரில் இருந்து விலகுவதாக சில தகவல்கள் கடந்த சில வாரங்களாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இதனை தொடர்ந்து கார்த்திக் இல்லை என்றால் அந்த சீரியலை புறக்கணிப்பபோவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த தொடரில் இருந்து கார்த்திக் விலகிவிட்டதாகவும்,அவருக்கு பதில் ரெட்டைவால் குருவி தொடரில் ஹீரோவாக நடித்த அஸ்வின் குமார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது அஸ்வின் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான குக் வித் கோமாளி 2வில் பங்கேற்று வருகிறார்.இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் , இந்த தகவல் உணமையானதா,உண்மையிலேயே கார்த்திக் விலகினாரா,அஸ்வின் புதிய ஹீரோவாகிறாரா உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இது குறித்து ஜீ குழுவினர் ரசிகர்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Publisher

Check Also

Charukesi Movie Review

Introduction In an era dominated by commercial entertainers, Charukesi arrives as an emotional family drama …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *