Saturday , October 3 2026

சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி.. கொண்டாடத்தில் ரசிகர்கள்..

காஞ்சிபுரம், தேனி, திருச்சி, நாமக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களில் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்து விஜய் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய் திரையில் அறிமுகமாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இன்று சிறப்பு பிரார்த்தனைகளில், கொண்டாடங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

1984-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தோன்றினார். இந்த திரைப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கினார் இதனைத் தொடர்ந்து ஹீரோவாக நாளைய தீர்ப்பு மாண்புமிகு மாணவன் செந்தூரப் பாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் அறிமுகம் செய்யப்பட்டார் .

திரை உலகில் நடிகர் விஜய்க்கும் அஜித்துக்கும் கடுமையான போட்டி நிலவியதால் இருவரும் தற்போது வரை சினிமா களத்தில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள் தற்போதுள்ள மாஸ்டர் திரைப்படம் வரை நடிகர் விஜய்க்கு பயங்கரமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் 1992-ஆம் ஆண்டு முதன்முறையாக ஹீரோவாக நடிக்கத் துவங்கிய நாளான இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அவரது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக காஞ்சிபுரம், தேனி, திருச்சி, நாமக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களில் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்து விஜய் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

#28YearsOfBelovedVIJAY

About Publisher

Check Also

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join Hands

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *