Tuesday , August 18 2026

Cinema News

புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் அதர்வாமுரளி

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம்! தனது முதல் பட டைரக்‌ஷனான  “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து “வானவராயன் வல்லவராயன்” படத்தை  இயக்கினார்.இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார்.இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது …

Read More »

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் – தான்யா ரவிசந்திரன் நடிக்கின்றனர்

காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது Rise East Entertainment தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும் தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.  “வணக்கம் சென்னை, காளி  படங்களுக்கு பின் நான் இயக்கும் முன்றாவது படம் …

Read More »

எஸ்பிபி-க்கு பாடகர் சிக்கில் குருசரண் மற்றும் பிரபல மருத்துவரின் இசை அஞ்சலி

பிரபல மருத்துவ நிபுணரும் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் நண்பருமான டாக்டர் ஆர் ஸ்ரீதரன் (கற்பகதாசன்), பாடகர் சிக்கில் குருசரணுடன் இணைந்து மறைந்த பாடகருக்கு இசை அஞ்சலி ஒன்றை செலுத்தியுள்ளார். ‘காத்திருந்த கண்கள்’ திரைப்படத்திற்காக P B ஸ்ரீனிவாஸ் பாடிய ‘துள்ளி திரிந்த பெண் ஒன்று…’ பாடலை அடிப்படையாகக் கொண்டு ‘துள்ளி திரிந்த உயிர் ஒன்று, துயில் கொண்டதே இன்று…’ எனும் பாடலை டாக்டர் ஸ்ரீதரன் இயற்ற, சிக்கில் குருசரண் அதை …

Read More »

குரங்குகளுக்காக விஜய் ரசிகன் செய்த காரியம்

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்! சற்று முன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது .இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை .ஆகையால் நிரந்தரமாக குரங்குகளுக்கு …

Read More »

“ஆன்டி இண்டியன்” படத்திற்கு மீண்டும் தடை

சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”. 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று …

Read More »

The Family Man

ராஜ் மற்றும் டிகேயின் புகழ்பெற்ற தி ஃபேமிலி மேன் சீரிஸின் புதிய சீசன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது அமேசான் பிரைம் வீடியோ ஜூன் 4ல் வெளியாகும் புது சீரிஸை புதிர் ததும்பும் ட்ரெய்லர் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது தி ஃபேமிலி மேன் புதிய (The Family Man) சீரிஸுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்பட 240 நாடுகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த சீரிஸை மக்கள் கண்டு …

Read More »

“N4” படத்திற்கு கிடைத்த சிறந்த இயக்குனர் விருது, மகிழ்ச்சியில் “N4” படக்குழுவினர்

“மை சன் இஸ் கே” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது படமாக “N4” திரைப்படத்தை இயக்கியுள்ளார். தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வடசென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, …

Read More »

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது..அண்ணாத்த நடிகரின் வேண்டுகோள்

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார். நடிகர் திரு பாலா பேசுகையில்.. தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் …

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கொரோனா உதவிகள் !

இன்று 09.05.2021 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் BLUE STAR WATER DISPENSER (HOT,PLAIN,COLD) =2nos ADLISC CPAP FULL FACE MASK =5nos மேலும் கொரோனா வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 31 நபர்களுக்கு தலா 500 ரூபாய் ஊக்கதொகை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை,இளைஞரணி தலைமை,மற்றும் தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது.இந்தவிழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்  திரு.R.பரணிபாலாஜி,  கள்ளக்குறிச்சி மாவட்ட …

Read More »

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன்

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’ZEE5ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்கு பிறகு வைபவ் – வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் வெளியாகிறது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி …

Read More »