Sunday , October 11 2026

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் – தான்யா ரவிசந்திரன் நடிக்கின்றனர்

காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது Rise East Entertainment தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும் தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 

“வணக்கம் சென்னை, காளி  படங்களுக்கு பின் நான் இயக்கும் முன்றாவது படம் இது. சிறந்த கதை ஒன்று அமைய வேண்டும் என்று சிறிது காலம் எடுத்து கொண்டேன், அப்போது தோன்றியது தான் இப்படத்தை கதை. இது வாழ்வின் பயணத்தை பற்றிய கதை, இக்கதையில் பயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இளம் நடிகர்களை இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்கவைக்க முடிவு செய்தேன். அந்த கதாபாத்திரங்களுக்கு காளிதாஸ் ஜெயராம் மற்றும் தான்யா ரவிசந்திரன் கச்சிதமாக பொருந்தியிருந்தனர். மிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவாளரான ரிச்சர்ட் M நாதன் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். Rise East Entertainment தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கின்றார். இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்படும்” என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி

About Publisher

Check Also

“யாருக்கும் நாம போட்டியோ எதிரியோ கிடையாது!” 😱 சிவகார்த்திகேயன் மாஸ் பேச்சு! | SK Fans Meet

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *