Saturday , September 5 2026

மாயத்திரை விரைவில் திரையரங்குகளில் வெளியீடு

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார்.டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார் . V.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் .

இப்படத்திற்கு  சென்சார் குழுவினரால்  UA சான்றிதழ் வழங்க பட்டுள்ளது . திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது .

மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.

நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன்தொழில்நுட்பக்குழு :  
இயக்கம் – தி.சம்பத் குமார்
தயாரிப்பு – V.சாய்
இசை – S .N அருணகிரி
ஒளிப்பதிவு -இளையராஜா
கலை இயக்கம்  – பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் – ராதிகா
சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் – அசோக்  
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

About Publisher

Check Also

200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யாவின் தொடரும் வெற்றிப் பயணம்

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு 200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *