Tuesday , May 19 2026

தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக உயர்வு; ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் அதிகபட்சமாக, 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.

”தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 33 ஆயிரத்து 231 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8 லட்சத்து 61 ஆயிரத்து 211 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 32 ஆயிரத்து 186 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8 லட்சத்து 21 ஆயிரத்து 594 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அரசு சார்பில் 45, தனியார் சார்பில் 40 என மொத்தம் 85 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 1,045 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, இதுவரை 31 ஆயிரத்து 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் 38 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதில், 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 24 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் இணை நோய் உள்ளவர்கள் 33 பேர் மற்றும் இணை நோய் அல்லாதவர்கள் 5 பேர் ஆவர்.

தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 822 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக, 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது”.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

About Publisher

Check Also

பயிற்சி டி.எஸ்.பி., மீது தவறில்லை……மனு வாபஸ்

பயிற்சி டி.எஸ்.பி., மீது தவறில்லை……மனு வாபஸ் திருச்சி, ஏப்‌. 6- தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலை சேர்ந்த மாணவி சென்னையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *