Saturday , October 3 2026

சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு

***அசல் கோளாறு, தர்புகா சிவா மற்றும் ஷிவாங்கி கூட்டணியில் வெளியான ‘டிக்கி டிக்கி டா’*இசையுலகில் தனித்துவம் வாய்ந்த சுயாதீன பாடல்களை வெளியிட்டு வரும் முன்னணி ஆடியோ நிறுவனமான சரிகம.. அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ‘டிக்கி டிக்கி டா’ எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான பிரத்யேக காணொளியையும் வெளியிட்டிருக்கிறது.இந்த பாடலுக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்தப் பாடலை அசல் கோளாறு, தர்புகா சிவா மற்றும் ஷிவாங்கி ஆகியோர் இணைந்து பாடி, ஆடி நடித்திருக்கிறார்கள். இந்த வீடியோ இசை ஆல்பத்தை மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளரும், பாடகருமான தர்புகா சிவா இயக்கியிருக்கிறார்.‌ இந்த பாடலை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. ஃபங்க் சாங் பாணியில் தயாராகி இருக்கும் இந்த பாடலில் அசல் கோளாறுவின் ராப் இசை பாடல்கள் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பாடலின் மெட்டு மெல்லிசையோடு இணைந்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்திருக்கிறது.இந்தப் பாடல் சரிகம ஒரிஜினல்ஸாக வெளியாகி இருப்பதால், விரைவில் பல மில்லியன் பார்வையாளர்களால் விரும்பி பார்வையிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.சரிகம லெட்ஸ் கோ லைவ் நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

About Publisher

Check Also

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join Hands

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join …