Saturday , October 3 2026

👿Striker Tamil Movie Review 🌟🌟

படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜஸ்டின் விஜய் (ஜோஷி) தனது மேல் படிப்பை முடித்துவிட்டு ஒரு கார் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். பல கார்களை பழுது பார்க்கும் ஹீரோ ஒரு காரை முழுதும் பழுது பார்த்து முடிப்பதற்குள் கார் டெலிவரி செய்யப்படுகிறது. அந்த காரில் பயணம் செய்தவர்கள் பிரேக் பிடிக்காமல் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இதை அறிந்த ஜோஷி மிகவும் கவலைப்படுகிறார்.

அந்த சமயத்தில் அவரின் நண்பர்கள் சிலர் அமானுஷ்யங்கள் பற்றி ஜோசியிடம் தெரிவிக்கிறார்கள். பிறகு தனது மெக்கானிக் வேலையை விட்டு ஒரு இன்ஸ்டிடியூட்டில அமானுஷ்யங்களை பற்றி படித்து வருகிறார். அமானுஷ்யங்களை பற்றிய வகுப்பு எடுப்பவராக கஸ்தூரி வருகிறார். மாணவர்களுக்கு அமானுஷ்யங்கள் என்றால் என்ன அது எங்கெங்கு உள்ளது என்பதைப் பற்றி முழுமையாக சொல்லிக் கொடுக்கிறார்.

நாயகன் ஜோஷி மிக ஆர்வமாக பல சந்தேகங்களை கஸ்தூரியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். Youtube சேனல் நடத்தி வரும் வித்யா பிரதீப் அமானுஷ்யங்களை பற்றிய இன்டர்வியூ எடுக்க ஜோஷியிடம் கேட்கிறார், பின் இருவரும் பழகி வரும் சமயத்தில் ஒரு நாள் பங்களாவிற்குள் செல்கின்றனர் ஜோஷியும்,வித்யா பிரதீப்பும். அந்த பங்களாவில் இருவருக்கும் என்ன நடக்கிறது அமானுஷ்யங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று இரண்டாம் பாதியில் கதை நகர்கிறது.

“ஓஜோ போர்ட்” வைத்து அமானுஷ்யங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று இருவரும் சோதிக்கின்றனர் அந்த பங்களாவில் ‘பேய்’ வருவது போல் மிரட்டலாக காட்சிகள் நகர்கின்றன. கடைசியில் அந்த பிரச்னையிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

திரைப்படத்தில் ராபர்ட் மாஸ்டரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது, நடிகை கஸ்தூரியின் கதாபாத்திரம் சிறிதளவாக இருந்தாலும் கச்சிதமாக நடித்திருககிறார். ஹீரோவாக நடித்திருக்கும் ஜஸ்டின் விஜய் நன்றாக நடித்து இருக்கிறார் இருந்தாலும அவருக்கு நடிப்பு பயிற்சி தேவைப்படுகிறது.

படத்தில் இசை,பின்னனி இசை மிரட்டல் ஆக இருந்தாலும் பாடல்கள் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை, படத்தில் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் த்ரில்லரா எடுத்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் இந்த ‘ஸ்டிரைக்கர்’ பயம் இல்லாத பேய் படம்.

About Publisher

Check Also

🎬 Don’t Trouble The Trouble –திரை விமர்சனம்

Introduction Fahadh Faasil-ன் Telugu solo-lead debut-ஆக வெளியாகியுள்ள Don’t Trouble The Trouble, Shashank Yeleti இயக்கிய fantasy …