Tuesday , July 28 2026

தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய டக் ஜெகதீஷ் – நேச்சுரல் ஸ்டார் நானி

மேசான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட டக் ஜெகதீஷ் திரைப்பட உலகிலிருந்து இலட்சக்கணக்கான ரசிகர்களிடமிருந்து சிறப்பான பாராட்டையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது. டக் ஜெகதீஷ்-ன் புரொமோஷன் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டிருக்கும் ஒரு வழக்கமான போஸ்டரை எதிர்பார்த்து நானி-யின் ரசிகர்கள் மாலுக்குள் நுழைந்தபோது அவர்களுக்கு ஒரு சிறப்பான வியப்பும் காத்திருந்தது. வழக்கமாக வைக்கப்படுகிற போஸ்டர் போல இது இருந்தாலும், அது உயிர்பெற்று நிஜமாக வந்தது அவர்களது ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்தது. அவர்களது அபிமான நட்சத்திர நானியோடு அங்கு வந்திருந்த ரசிகர்கள் நிஜமாகவே பேசி கலந்துரையாட கிடைத்த வாய்ப்பு தான் அவர்களது ஆனந்தத்திற்கும், வியப்புக்கும் காரணம்.  

மிக நவீன தொழில்நுட்ப ஆதரவோடு ஹைதராபாத்-ன் மிகப்பிரபலமான மால்களுள் ஒன்றில், இந்த வியப்பூட்டும் நிகழ்வு நடந்தேறியது. வருகை தந்திருந்த பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்துவதாக இது அமைந்தது. இயற்கையாக நடிக்கும் நடிகர் என்ற புகழ்பெற்றிருக்கும் நானி, அவர்களது ரசிகர்களோடும், பார்வையாளர்களோடும் கொண்டிருந்த நெருக்கமான பிணைப்பின் காரணமாக இந்த செயல்முயற்சியின் வழியாக அவரது டக் ஜெகதீஷ் குடும்பத்திற்கு அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடும், அன்போடும் வரவேற்றார்.

இந்த வீடியோ, ஹைதராபாத்-ன் இனார்பிட் மால் டெக் சிட்டி என்ற ஒரு மாலில் ஒரு கேளிக்கையான கலந்துசெயல்படும் நிகழ்வாக இருந்தது. நானி-யின் அசைவற்ற ஒரு தோற்ற உருவத்தைக் கொண்டு ஒரு திரை அங்கு அமைக்கப்பட்டிருந்தது. திடீரென்று யாரும் எதிர்பாராதவாறு அந்த திரையில் நானி நேரலையாக தோன்றியது. அங்கிருந்த ரசிகர்களோடு கலந்துரையாடிய நானி, அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் டக் ஜெகதீஷ் பற்றி உற்சாகத்தோடு பேசினார். இந்த திரைப்படம் பற்றி அவர்களது கருத்துகள் என்ன என்று அவர்களிடம் கேட்டறிந்தார்.


இணைப்பு: https://www.youtube.com/watch?v=BejGSe5wkus

திரு. ஷிவா நிர்வாணா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் டக் ஜெகதீஷ் திரைப்படத்தில் ரீது வர்மா, ஜெகபதி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர், வைஷ்ணவி சைதன்யா, தேவதர்ஷினி மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோரும் நானியுடன் இணைந்து நடித்துள்ளனர். பிரத்யேகமாக அமேசான் பிரைம் வீடியோவில் மட்டும், 2021 செப்டம்பர் 10ம் தேதியன்று இத்திரைப்படம் வௌியானது.

About Publisher

Check Also

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்! புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *