Sunday , September 20 2026

‘அழகிய கண்ணே ‘படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வம் அவர்களும் கவனிக்கிறார்கள்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இத்திரைப்படத்தில்  கெளரவ தோற்றத்தில்  நடித்துள்ளார் .தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .

நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி , பிரபு சாலமன்  இவர்களுடன் கெளரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தொழில்நுட்பக்குழு :
இயக்கம்  – R.விஜயகுமார்
தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)
பாடல்கள் – வைரமுத்து
இசை – N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவு – A.R.அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத் தமிழன்
நடனம் – ராதிகா
தயாரிப்பு மேற்பார்வை – இளையராஜா செல்வம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

About Publisher

Check Also

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join Hands

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *