Monday , September 21 2026

பிரபல இயக்குனரின் மைத்துனரை திருமணம் செய்த கயல் ஆனந்தி!

தமிழ் நடிகை ஆனந்திக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் பிரபல இயக்குனர் ஒருவரின் மைத்துனரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

பிரபுசாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி அதன் பின்னர் ’பரியேறும் பெருமாள்’ ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ’சண்டிவீரன்’ ’விசாரணை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழித் திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருந்த அவருக்கு நேற்று சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனருடன் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலகினருக்கு இந்த திருமணத்தில் கலந்து கொள்ளஅழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மூடர் கூடம்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் அவர்களின் மைத்துனர் தான் கயல் ஆனந்தி திருமணம் செய்த மணமகன் சாக்ரடீஸ் என்பது குறிப்பிடதக்கது. இவர் ’அலாவுதீனின் அற்புத கேமரா’ ’அக்னிசிறகுகள்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் இணை இயக்குனராக பணி புரிந்துள்ளார் என்றும் விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இணை இயக்குனர் சாக்ரடீஸ் மற்றும் கயல் ஆனந்தி திருமணத்தை அடுத்து திரையுலகினர் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

About Publisher

Check Also

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join Hands

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *