Introduction
திருமணம் என்ற நிகழ்வை மையமாக வைத்து, ஒரு கிராமத்து திருமண வீட்டில் நடக்கும் உறவுகள், காதல், எதிர்பார்ப்பு, மோதல் மற்றும் உணர்வுகளை இயல்பான நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம் ‘மொத ராத்திரி’. ஒரு நாள் சம்பவத்தை மையமாக கொண்டிருந்தாலும், மனிதர்களின் மனநிலையை ஆழமாக பேசுகிறது.
Storyline
காதல் தோல்வியால் துபாய் செல்லும் ரிஷிகாந்த், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அவருக்குத் தெரியாமலேயே திருமண ஏற்பாடுகள் நடக்க, குடும்பத்தினரின் கட்டாயத்தால் அனிஷ்மா அனில்குமாரை திருமணம் செய்கிறார்.
முதல் இரவில் மனைவியிடம் மனம் திறந்து பேச முயற்சிக்கும்போது, அவர் தனது காதலனுடன் ஓட முயற்சிக்கிறார். அதன் பிறகு ரிஷிகாந்த் எடுக்கும் முடிவு என்ன? திருமண வாழ்க்கை வெற்றி பெற்றதா, காதல் வென்றதா என்பதுதான் படத்தின் மையம்.
Performance Highlights
ரிஷிகாந்த் நாயகனாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக மருது கதாபாத்திரத்தில் அமைதியாகவே உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பு சிறப்பாக உள்ளது.
அனிஷ்மா அனில்குமார் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக இறுதிக்காட்சியில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி அழும் காட்சி கைதட்டல் பெறுகிறது.
சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா உள்ளிட்ட அனைவரும் நடிகர்களாக இல்லாமல் உண்மையான கிராமத்து மனிதர்களைப் போல நடித்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
Technical Brilliance
ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி திருமண வீட்டின் சூழலையும், இரவு நேரக் காட்சிகளையும் மிகவும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார்.
பரத் சங்கரின் இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளுடன் பயணிக்கிறது. அசோக் அர்ஜுனனின் படத்தொகுப்பு, ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் மீதும் பார்வையாளர்களின் கவனத்தை வைத்திருக்கிறது.
Direction and Production
இயக்குநர் ராஜா கருப்புசாமி ஒரு திருமண வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மிகைப்படுத்தாமல், உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
காதல், திருமணம், குடும்ப உறவுகள் போன்ற விஷயங்களை மேலோட்டமான நகைச்சுவையாக மட்டும் சொல்லாமல், மனிதர்களின் மனநிலையையும் சேர்த்து பதிவு செய்திருப்பது இயக்குநரின் பலம். வழக்கமான கமர்ஷியல் சினிமாவைத் தாண்டி ஒரு இயல்பான படைப்பாக இது கவனம் பெறுகிறது.
Plus 👍
- இயல்பான கிராமத்து பின்னணி
- ரிஷிகாந்தின் நடிப்பு
- அனிஷ்மா அனில்குமாரின் அழுத்தமான நடிப்பு
- திருமண வீட்டின் உணர்வுகளை இயல்பாக பதிவு செய்த விதம்
- பல நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு
- ஒளிப்பதிவு
- இசை மற்றும் பின்னணி இசை
- நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும் கதைக்களம்
Minus 👎
- ஒரு நாள் சம்பவத்தை மையமாக கொண்டதால் சில இடங்களில் வேகம் குறைவதாக உணரலாம்.
- பின்னணி இசையில் சில இடங்களில் ஒரே மாதிரியான இசை தொடர்ந்து வருவது சிறிய குறை.
Final Thoughts
‘மொத ராத்திரி’ என்ற தலைப்பு ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நினைவுபடுத்தினாலும், படம் திருமணம், காதல், குடும்பம், மனித உணர்வுகள் என பல விஷயங்களை பேசுகிறது.
பெரிய மாஸ் காட்சிகளை எதிர்பார்க்காமல், இயல்பான மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும் ரசிக்க விரும்புபவர்களுக்கு இந்தப் படம் நல்ல அனுபவமாக இருக்கும்.
மொத்தத்தில், ‘மொத ராத்திரி’ தலைப்பு தான் ஒரு மாதிரி… படம் அனைத்து மாதிரியான மக்களுக்கானது!
⭐ Open Mic Suresh Rating: 3.5/5 ⭐

Open Mic Tamil Here For Entertainment