Tuesday , July 21 2026

கனடாவில் சிக்கிய நடிகர் விஜயின் மகன் வீடு திரும்பினார்

கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் கனடாவில் சிக்கிய நடிகர் விஜய் மகன் வீடு திரும்பியதை அடுத்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் கனடாவில் சிக்கிய நடிகர் விஜய் மகன் வீடு திரும்பியதை அடுத்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திரைப்பட துறை தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.

கொரோனா அச்சுறுத்தலால் விமானசேவைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து சஞ்சய் நாடு திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி இருந்தார். இதையடுத்து வெளிநாட்டில் சிக்கியவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர மத்திய அரசு பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்மூலம் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நாடு திரும்பி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட ஜேசன் சஞ்சய், வீடு திரும்பியுள்ளார். பல மாதங்கள் கழித்து அவர் வீடு திரும்பியிருப்பதால் விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

About Publisher

Check Also

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்! புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *