Monday , August 24 2026

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம்    ” பிக்பாக்கெட் ” Pick Pocket ” பூஜையுடன் துவங்கியது.

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம்    ” பிக்பாக்கெட் ” Pick Pocket ” பூஜையுடன் துவங்கியது. ” பிக்பாக்கெட் ” Pick Pocket ” படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி துவக்கி வைத்தார்.விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்

பாளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு ” பிட்பாக்கெட்” Pick Pocket” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெக்ஸ்,இயன், கிறிஸ்டியன்,சந்தீப்,காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு – பிரேம்இசை – ஷாஜகான்எடிட்டிங் – அருண்குமார்சவுண்ட் மிக்சிங் – பிரேம் Di – ஜியாவுதீன்மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்தயாரிப்பு – P. R. விஜய்கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – J. S. ஜூபேர் அகமத். இவர் ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குனர் J. S. ஜூபேர் அகமத் பகிர்ந்தவை…ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை இது. 

பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை  வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள்.  ஒரு சில படங்களில் பிட்பாக்கெட் பற்றி ஒரு சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் கேரி பண்ணியது கிடையாது.ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க பிட்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதை  உருவாக்கி இருக்கிறேன்.பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாஃபியா கும்பல் செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம் என்றார் இயக்குனர்J. S.ஜூபேர் அகமத்.இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது.

புதுச்சேரியின் முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள்  படப்பிடிப்பினை துவக்கி வைத்தார்.

About Publisher

Check Also

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 …