Thursday , April 16 2026

ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு !!

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் . ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் , லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், வெங்கட் சுபா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவராக நடிக்கும் ஹர்பஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் .தற்போது இப்படத்தின்  ” Superstar  anthem “ என்ற முதல் பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்  .நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார் . அறிமுக இசைஅமைப்பாளர் DM உதயகுமார் இசையமைத்துள்ளார் .
சிம்பு தொலைபேசியில்  ஹர்பஜனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . மேலும் பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது , திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என வாழ்த்தியுள்ளார் .இதற்கு பதிலளித்த ஹர்பஜன் ” எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக கிடைத்துள்ளீர்கள் . சென்னையில் நாம் இருவரும் விரைவில் சிந்திப்போம்”என கூறியுள்ளார் .
பிரண்ட்ஷிப் திரைப்படம்  இந்திய மொழிகளில் விரைவில்  வெளியாக இருக்கிறது .

தொழிநுட்பக்குழு :
இயக்கம் – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா
தயாரிப்பு – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா
இணைத்தயாரிப்பு – வேல்முருகன்
ஒளிப்பதிவு – சாந்த குமார்
இசை – DM உதயகுமார்
படத்தொகுப்பு – தீபக் S தவாரக்நாத்
கலை இயக்கம் – மஹேந்திரன்
வசனம் – PS ராஜ்
சவுண்ட் டிசைன் – ஆனந்த் ( 4Frames )
நடனம் – ஷாம் சூர்யா
ஆடை வடிவமைப்பு – வசந்த்
ஸ்டில்ஸ்- சிவா
நிர்வாக தயாரிப்பு – ரோபின்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

About Publisher

Check Also

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *