Monday , September 21 2026

நயனுக்கு முத்தம் கொடுக்கும் விக்கி: வைரலாகும் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஆரம்பித்த இந்த காதல் விரைவில் திருமணம் என்ற அடுத்தகட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து அவை வைரல் ஆகி வருவது தெரிந்ததே. நேற்று கூட நயன் மற்றும் விக்கி ஆகிய இருவரும் சிறு குழந்தைகளாக கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன் நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் நயன் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் காதல் குறியீடுகளையும் பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் பதிவு செய்த இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கானவர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இருவரும் பொருத்தமான ஜோடிகள் என்றும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பல ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

About Publisher

Check Also

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join Hands

Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *