Tuesday , May 19 2026

Cinema News

ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!. ரஜினி பரபரப்பு டுவிட்

சென்னை: வரும் ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாகவும், தேதி டிச., 31ல் அறிவிக்க உள்ளதாக டுவிட்டரில் ரஜினி தெரிவித்துள்ளார். அரசியல் நிலைப்பாடு குறித்து என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான நிர்வாகிகள் தனி கட்சி துவங்க வேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த ரஜினி விரைவில் முடிவை …

Read More »

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

இன்றைய வேகமான உலகில் அடுத்து என்ன என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படியான வேகமான வாழ்க்கையால், பார்க்கும் கதையிலும் த்ரில்லர் வகை படங்களையே அதிகம் எதிர்நோக்குகிறோம். அதனாலே வித்தியாசமான த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது அந்த வரிசையில் இணைகிறது ‘ரூபம்’. எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அது கேட்கும் பிரம்மாண்டத்தை வழங்கி வரும் நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். அறம் தொடங்கி சமீபத்திய க/பெ ரணசிங்கம் …

Read More »

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.  இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு  தனது உடலமைப்பை …

Read More »

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா !

மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரசிகர்களிடம் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அட்டகாசாமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. தற்போதைய தமிழ் சினிமாவின் காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு, இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார். இதில் …

Read More »

ஆர்யன் ஷாம் நடிக்கும் புதிய படம் அந்த நாள்

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க R. ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் அந்த நாள்.வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கான இறுதி க்கட்ட ப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.விரைவில் வெளிவரவிருக்கும் அந்த நாள் படத்தில் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதை நாயகிகளாக ஆத்யா, …

Read More »

தாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்

இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் திருமதி உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார். நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது …

Read More »

நடிகர் பிரகாஷ்ராஜ் , ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்தார் !

ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து கூறியதாவது… சினிமாவில் பலருக்கு முன்னுதரனமாக, மிகசிறந்த நடிகராக திகழும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது வளரும் இயக்குநர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் கனவு. நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகச்சிறந்த நடிகராக தன்னை அவர் வடிவமைத்து …

Read More »

Editor Selva RK Reception Photo

பத்து வருடங்களாக காதலித்தபெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர். தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா RK. பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார். இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். சினிமாவில் எதையாவாது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காத்திருந்திருக்கிறார்கள். …

Read More »

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர உள்ள நிலையில், விரைவில் …

Read More »

“காகித பூக்கள் ” படக் குழுவினரை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள் படப்பிடிப்பில் பரபரப்பு

கொரோனா காலமான இக்கால கட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்கள் முழு நலத்துடன் கொரோனா அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் ” காகித பூக்கள் ” படக் குழுவினர் பொள்ளாச்சி அருகே உள்ள . . . . என்ற கிராமத்திற்கு சென்றனர். ஆனால் அந்த கிராம மக்கள் படக் …

Read More »