Saturday , October 3 2026

Cinema News

ஜல்லிக்கட்டு குறித்த தமிழ் திரைப்படத்திற்காக இணையும் மலையாள இயக்குநர், நடிகர்

தமிழ் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான காதலின் காரணமாக பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குநருமான வினோத் குருவாயூர் மற்றும் நடிகர் அப்பாணி சரத் ஆகியோர் ஒரு புதிய தமிழ் திரைப்படத்திற்காக இணைகின்றனர். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டிமீடியா தயாரிக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளுக்கு டாக்டர் ஜெயராம் சிவராம் பொறுப்பேற்றுள்ளார். திரைப்படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ‘சண்டைக்கோழி 2’ மற்றும் …

Read More »

நடிகர் கிஷோர் நடிக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் !

நடிகர் கிஷோர், தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகர் என கொண்டாடப்படுபவர். ஹீரோ, வில்லன் குணசித்திரம் என எந்தவொரு கதாப்பாத்திரமானாலும் தன் தனிப்பட்ட திறமையால், அற்புத நடிப்பை வழங்கி அசத்துபவர். தற்போது நடிகர் கிஷோர் அறிமுக இயக்குநர் திரவ் இயக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” படத்தில் அற்புதமான அப்பா கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். “ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் அப்பா மகள் உறவை அழகாக சொல்லும் ஒரு இசைத்திரைப்படமாக உருவாகவுள்ளது. மகளின் பிறந்த நாள் …

Read More »

நடிகர் ஆதி -இன் சமூக சேவை

குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.சமீபத்தில், அந்த குழந்தைகளில் அசாத்திய திறமை கொண்ட ஆறு வயது முதல் 9வயது வரை உள்ள 6 குழந்தைகளை தேர்வு செய்தார்கள். அவைகள் உடுத்த ஆசை படும் மிக உயர்ந்த ஆடை எது என்று கேட்கப்பட்டது. அவர்கள் …

Read More »

ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது: நடிகர் அபிஷேக் பேச்சு

மோகமுள்’  என்ற ஒரே ஒரு படம் நடித்தேன்.அதன்மூலம்  இருபத்தைந்து ஆண்டுகால சினிமா வாழ்க்கை எனக்குக் கிடைத்தது என்று நடிகர் அபிஷேக கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: ‘மோகமுள்’ திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன .அந்த வகையில் ‘மோகமுள்’ படத்திற்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அப் படத்திற்காக எழுதிய திரைக்கதையை நூலாக அப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ்  உருவாக்கியிருக்கிறார்.இந்த நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.’மோகமுள்’  திரைக்கதை நூலின் வெளியீடு ,44வது …

Read More »

2323 ‘ டீசரை வெளியிட்ட எஸ். ஏ. சந்திரசேகரன்!

இயக்குநர் எஸ். ஏ .சந்திரசேகரன் வெளியிட்ட ‘2323 ‘ படத்தின் டீஸர்டைரக்டர் சுப்பிரமணியம் சிவா பாராட்டிய டீசர் ”2323 the beginning”   மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The beginning ‘உருவாகியிருக்கிறது.கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கியுள்ளார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு ‘தமிழனானேன்’ என்றொரு படத்தை எடுத்திருந்தார். இந்த’ 2323 ‘படத்தைப்  பற்றி இயக்குநர் பேசும் போது,“இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது …

Read More »

அழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன் !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இயக்குனர் விஜயகுமார் பிரபுசாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி …

Read More »