Tuesday , May 19 2026

Cinema News

‘அழகிய கண்ணே ‘படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் …

Read More »

பா.இரஞ்சித்தை பாராட்டிய உலக நாயகன்

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘சார்பட்டா படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன், …

Read More »

படம் இயக்குவது ஈஸி ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினமான வேலை ” பார்கவி ” படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் V.ராஜா

புதுமுகங்களை வைத்து ” பார்கவி ”  என்ற படத்தை தயாரித்து, இயக்க இருக்கிறார் ” அருவா சண்ட ”  படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான  v.ராஜா.கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி இயக்குனரின் பிறந்த நாளான அன்று படத்தின் தலைப்பை ” மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ” வெளியிட்டார் சினிமா கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் தலைப்பும் அதன் தோற்றமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.படத்தை பற்றி …

Read More »

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் First Look Poster

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் …

Read More »

சூரியாவின் 2டி நிறுவனத்துடன் அமேசான் பிரைம் நிறுவனம் ஒப்பந்தம்

·         எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ·         மேலும் அந்நிறுவனம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய் பீம்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ மற்றும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். ·         அமேசான் பிரைம்- சமீபத்திய திரைப்படங்கள், பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்டப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், விளம்பரம் இல்லாமல் இசையை கேட்பதற்கான அமேசான் பிரைம் மியூசிக்.. இவையெல்லாம் இலவசமாகவும், விரைவாகவும் வழங்குவதற்கான வினியோக கட்டமைப்பு, புதிய பார்வையாளர்களை சென்றடைவதில் எளிதான அணுகுமுறை ஆகியவற்றை நம்ப முடியாத வகையில் அமேசான் வழங்கிவருகிறது. அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிறுவனம் இன்று சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடனான முதல் பிரத்யேக ஒப்பந்தத்தை அறிவிக்கிறது. இதில் ஒரு பகுதியாக அடுத்த 4 மாதங்களில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் நான்கு திரைப்படங்கள் உலகளாவிய அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரையிடப்படுகிறது. இந்திய பார்வையாளர்களின் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களின் தேடல்களுக்கான தேர்வு திட்டங்களில் தங்களுடைய அர்ப்பணிப்பை வழங்கும் இந்த சங்கமம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மொழி உள்ளடக்க தொகுப்பை மேலும் வலிமைப்படுத்தி, சிறந்த உள்நாட்டு கதைகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்கிறது. அமேசான் பிரைம் வீடியோவும், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வகையில் அவர்களின் நேரடி சேவையை வழங்கி வருகிறது. திரில்லர், சஸ்பென்ஸ், காமெடி, ஃபேமிலி டிராமா என பல்வேறு ஜானர்களில் தயாராகி, பட்டியலிடப்பட்ட படங்களில் இந்தியாவின் மிகவும் பிடித்த நடிகர்களில்  ஒருவரான ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்த திரைப் படங்களும் இடம்பிடித்திருக்கிறது. இந்த திரைப்படங்களில் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ போன்ற படங்களும் உள்ளன. சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான ‘உடன்பிறப்பே’ என்ற படமும் உள்ளது. அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய ‘ஓ மை டாக்’ என்ற படமும் இடம் பெற்றிருக்கிறது. ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படமும் இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. ‘அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் திரைப்படங்களி மிகப்பெரிய நூலகம் ஒன்று எங்களிடம் உள்ளது’ என அமேசான் பிரைம் வீடியோவின் இயக்குனரும், உள்ளடக்க தலைவருமான விஜய் சுப்பிரமணியம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,’ சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் உடன் நாங்கள் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் திரையுலகில் புதிய மைல்கல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அத்துடன் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் நான்கு திரைப்படங்களை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திலிருந்து நேரடியாக உலகளாவிய திரைப்பட பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கிறோம். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘சூரரை போற்று’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் அன்பும், ஆதரவும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உள்ளூர் மொழியிலான திரைப்படங்கள் கடந்த வருடத்தில் 50 சதவீத பார்வையாளர்களை சென்றடைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறோம். இவர்கள்  தமிழக எல்லையை கடந்த பார்வையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. உள்ளூர் மொழியில் நேரடியாக படங்களை வெளியிடுவதன் மூலம் 20 சதவீதம் வரை சர்வதேச பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 2டி என்டர்டெய்ன்மென்ட் போன்ற ஆக்கபூர்வமான பட நிறுவனத்துடனான எங்கள் வலுவான உறவு மேலும் தொடர்கிறது. இதன் காரணமாக உள்நாட்டு, உள்ளூர் மொழியில் தயாராகும் கதைகளை, அதற்கான பார்வையாளர்களை கண்டறிந்து அவர்களிடத்தில் எடுத்துச்  சென்றடைய வைப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.’ என்றார். 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான சூர்யா இதுதொடர்பாக பேசுகையில்,’ கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. முன்னோடிகள் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டின் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம். 2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. பொன்மகள் வந்தாள் முதல் சூரரைப்போற்று வரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ உடன் தொடர்ந்து தொழில்ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் விவரங்களின் பட்டியல்கள் ஜெய் பீம் (நவம்பர் 2021) த,செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’. ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராஜககண்ணு போலீசாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனை தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே ஜெய் பீம் கதை. ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன், கலை கே கதிர் ,படத்தொகுப்பு பிலோமின், உடைகள் பூர்ணிமா ராமசாமி. உடன்பிறப்பே (அக்டோபர் 2021) இயக்குனர் இரா சரவணன் இயக்கிய திரைப்படம் ‘உடன்பிறப்பே’. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் மற்றும் மாதங்கி ஆகியோருக்கு இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனனும், சட்ட விதிகளின் படி  விடாமுயற்சியுடன் பயணிக்க  வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்கவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிறது. இறுதியில் இந்த குடும்ப ஒற்றுமைக்காக மாதங்கி எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுதான் ‘உடன்பிறப்பே’. இசை =டி.இமான், ஒளிப்பதிவு =வேல்ராஜ், படத்தொகுப்பு= ரூபன், கலை இயக்கம் =முஜிபூர், உடைகள் =பூர்ணிமா ராமசாமி. ஓ மை டாக் (டிசம்பர் 2021) அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கிய இந்த திரைப்படம். குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை, துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு மற்றும் விஸ்வாசம் குறித்து பேசும் ஒரு அற்புதமான திரைப்படம். பிறவி குறைபாடு காரணமாக ஒரு நாய்க்குட்டியை அதன் எஜமானர்களால் கொல்ல உத்தரவிடப்படுகிறது. ஆனால் அது இறுதியில் கொலையாளிகளிடமிருந்து தப்பிக்கிறது. ஒரு பையன் =அனைவராலும் வெறுக்கப்படுகிறான். நல்ல மாணவன் அல்ல, பக்கத்து வீட்டு அழகான பையனும் அல்ல. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான =அதிர்ஷ்ட குழந்தை. நாய்க்குட்டியும், அந்த பையனும் சந்திக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் இதயங்களை வென்று தங்களை தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கிறார்களா? என்பதே இப்படத்தின் கதை. ஒளிப்பதிவு கோபிநாத், இசை நிவாஸ் கே பிரசன்னா, எடிட்டர் மெகா, கலை மைக்கேல் ,உடைகள் வினோதினி பாண்டியன் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் (செப்டம்பர் 2021) இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கிய இந்த நகைச்சுவைத் திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரு கிராமத்தைப் பற்றிய செய்தி வெளியாகிறது. ஆனால் அந்த கிராம மக்களுக்கு டிவி பார்க்க மின்சாரம் இல்லை. குனிமுத்து 35 வயதான அப்பாவி. விவசாயி. கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற தனது காளைகளை இழக்கிறார். அவருக்கும் அவரது மனைவி வீராயிக்கும் குழந்தைகளைப் போல் அந்த காளைகள் இருந்தது. அவர் தனது நண்பர் மாந்தினியுடன்

Read More »

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ’96’ பட புகழ் கௌரி நடிக்கும் “உலகம்மை”

காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் பிரகாஷ் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். “உலகம்மை” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 96, மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 1970ல் நடைபெற்ற …

Read More »

விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டிரைலரை தெறிக்கவிடும் சாம் சி.எஸ்.

ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் நாளை (24.07.2021) வெளியாகவுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் உற்சாகமடைந்துள்ளனர். படகுழுவினர் அனைவரும் …

Read More »

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் #RAP019 படப்பிடிப்புக்கு வருகை தந்த இயக்குனர் இமயம்

நடிகர் ராம் பொதினேனி நாயகனாக நடிக்கும் #RAP019  படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வருகை தந்தார். படம் உருவாகும் விதத்தை பார்த்து இயக்குனர் N.லிங்குசாமியையும் படக்குழுவினரையும் …

Read More »