Sunday , October 11 2026

Kolai Tamil Movie Review ⭐⭐⭐

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாலாஜி கே. குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், சித்தார்த்தா சங்கர், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கொலை”.

Kolai (2023) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

மீனாட்சி செளவுத்ரி பிரபல மாடல் அழகி அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டி இருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைக்கிறார். அந்த கொலை வழக்கை ஐபிஎஸ் பயிற்சியில் இருக்கும் அதிகாரி ரித்திகா சிங் விசாரிக்கிறார்.

அந்த வழக்கிற்கு துணையாக இருக்க துப்பறிவாளன் விஜய் ஆண்டனிடம் உதவி கேட்கிறார். அந்த வழக்கை கையில் எடுக்கிறார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனியும் ரித்திகா சிங்கும் இணைந்து விசாரணையை மேற்கொள்ளும் போது கொலை செய்யப்பட்ட மீனாட்சி உடன் தொடர்பில் இருந்த நபர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து, விசாரித்து முடிவில் கொலை செய்த கொலையாளியை விஜய் ஆண்டனி சாமர்த்தியமாக எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கொலை படத்துடன் மீதிக்கதை.

விஜய் ஆண்டனி முற்றிலும் மாறுபட்ட சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல்ல விநாயக் என்ற கதாபாத்திரத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்கிறதுல எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அமைதியா சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரித்திகா சிங்கும் கதைக்கு ஏற்றவாறு ஐபிஎஸ் அதிகாரியாக தனக்கான வேலையை சிறப்பா செஞ்சிருக்காங்க.

கதையோட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி மாடல் அழகியாக அழகு பொம்மையாக சூப்பரா நடித்திருக்கிறார். ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம்பிடிப்ப்பார்.

சித்தார்த் சங்கர், ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், ஜான்விஜய், முரளி சர்மா, என எல்லாருமே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.

About Publisher

Check Also

🎬 Don’t Trouble The Trouble –திரை விமர்சனம்

Introduction Fahadh Faasil-ன் Telugu solo-lead debut-ஆக வெளியாகியுள்ள Don’t Trouble The Trouble, Shashank Yeleti இயக்கிய fantasy …