Sunday , October 11 2026

Naayaadi Tamil Review

யூடியூபர்கள்  சிலர் ஆதர்ஷ் தலைமையில் பங்களா ஒன்றின் அமானுஷ்யங்களை பதிவு செய்ய ஒருவர் கேட்டுக் கொண்டதின் பேரில் காட்டுப் பகுதியில் உள்ள பங்களாவுக்கு வருகின் றனர்.  அந்த இடம் பல நூறு வருடங்களுக்கு முன்பு நாயாடி இனத்தவ ரால் துர்சக்தியின் காவலில் இருக்கிறது.  1000 வருடம் வாழும் சக்தி பெற்ற தம்பதிகள்  அப்பகுதிக்கு வரும் இளைஞர்களின் உடலுக்குள் மாறி மாறி புகுந்து தங்களின் இளமையை தக்க வைக் கின்றனர். அந்த நாயாட்டி தம்பதி மற்றும் துர் சக்தியிடம் ஆதர்ஷ் தலைமையில் சென்ற வர்கள் சிக்கிக் கொள்கின் றனர். இதில் ஒவ்வொரு வராக துர்சக்தி யால் கொல்லப்படுகின்றனர். இறுதியில் ஆதர்ஷ் அவரது காதலி மற்றும் தோழி சிக்குகின்றனர். அவர்கள் கதி என்னவா கிறது என்பதற்கு படபடப் புடன் பதில் சொல்கிறது நாயாடி.

டைட்டிலை கேட்டவுடன் என்ன நயாடியா? அப்படின்னா என்ன? என்ற கேள்வி 90 சதவீதம் பேருக்கு எழும். நாயாடி என்பவர்கள் மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு இனம். காட்டுப்பகுதியில் மறைந்து வாழ்கின்றனர். அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கெட்ட  சக்திகளுக்கு பலி கொடுத்து தீய சக்தியின் அருள் பெறுகின்றனர் என்று நாயாடிக்கு படத்தில் விளக்கம் சொல் கிறார் இயக்குனர். ஆயிரம் வருடம் வாழ அருள் பெரும் நாயாடி ஜோடியின் அட்டகாசம் படத்தின் கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது.

படத்தில் எல்லோருமே புதுமுகங்கள் என்பதால் யார், யார் என்ன பாத்திரம் என்பதை  ஞாபகத்தில் வைக்க  முடியவில்லை. ஆனால் எல்லோருமே ரசிகர்களை எப்படியெல் லாம் பயமுறுத்த முடியுமோ அப்படியெல் லாம் பயமுறுத்துகிறார் கள்.

காட்டுப்பகுதியில் ஆதர்ஷும் அவரது நண்பர்களும்  நாயாடி  அரக்கனிடமிருந்து தப்பிச் செல்ல முயலும்போது ஒவ்வொருவரையாக அது தலையை திருகியும், உடலை இரண்டாக பிளந்தும் கொல்வது திகிலை பரப்புகிறது.

ஆதர்ஷ் நண்பர்கள் தப்பிக்க ஓடுவதும் ஆனாலும் மீண்டும் அதே இடத்துக்கு வந்து நிற்பதும் அவர்கள் பேயின் வசம் சிக்கிக்கொண்ட நிலையை உணர்த்து வதும் அதிலிருந்து மீள முடியாமல் அலறுவதும்  அடுத்து யார் பலியாகப் போகிறார்களோ என்ற டிவிஸ்ட்டும்  பயத்தை ஏற்படுத்துகிறது.

கிளைமாக்ஸ்  எதிர்பாராத திருப்பம். ஆனால் தனக்கு காதல், பாசம், அன்பு எதுவும் தெரியாது என்று ஆதர்ஷின் காதலி சொல்வது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஏனென்றால்  அவர் ஆரம்பத்தில் ஒரு ராஜாவைத்தான் காதலித்து திருமணம் செய்வதாக முன்கதையில் சொல்லப்படுகிறது.

மோகன்தாஸ் புள்ளியனி காட் தயாரித் திருக்கிறார்.

அருண் இசை திகிலூட்டு கிறது

மோசஸ் டேனியல் காட்டு பகுதியை வளைத்து வளைத்து  படமாக்கியிருக் கிறார்.

திகில் படம் தர வேண்டும் என்ற முடிவுடன் கூகுளில் தேடி நாயாடி என்ற இனம் பற்றி அறிந்து அதை வைத்து இப்படியொரு புனைக்கதையை இயக்கி யிருக்கிறார் ஆதர்ஷ் மதிகாந்தம். அதை  குழப்பாமல்  தெளிவாக.  சொல்லியிருக்கலாம்.

About Publisher

Check Also

🎬 Don’t Trouble The Trouble –திரை விமர்சனம்

Introduction Fahadh Faasil-ன் Telugu solo-lead debut-ஆக வெளியாகியுள்ள Don’t Trouble The Trouble, Shashank Yeleti இயக்கிய fantasy …