Monday , June 22 2026

வள்ளி திருமணம் – புதிய தொடரின் அட்டகாசமான இரண்டாவது ப்ரோமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

சென்னை, டிச.9- தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் புத்தாண்டு முதல் புத்தம் புதிய தொடரான வள்ளி திருமணம் என்னும் தொடரை ஒளிபரப்ப உள்ளது. இதன் 2வது ப்ரோமோவை நேற்று (வியாழக்கிழமை) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டது. வள்ளி திருமணம் தொடர் வரும் ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த புதிய ப்ரோமோ வள்ளியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும் அதேவேளையில் வள்ளியின் தாயாக நடிகை நளினியையும், வள்ளியின் நண்பராக நாஞ்சில் விஜயனையும் அறிமுகப்படுத்துகிறது. மேலும் இது வள்ளியின் அச்சமற்ற மற்றும் உயர்ந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் தைரியசாலியாகவும்; ஏழை எளிய மக்களுக்கு அன்பான இதயம் கொண்டவளாகவும் அவளை இந்த ப்ரோமோ காட்டுகிறது.

Watch the promo at – https://m.youtube.com/watch?v=5PMW8dAok5M&t=2s

About Publisher

Check Also

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,

சென்னைஸ் அமிர்தாகல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் …