Thursday , April 16 2026

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கியது!!

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கியது!!
Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”.

இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குநர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக, கொஞ்சி அழைக்கும் வார்த்தையே “பூக்கி”. அது கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா, இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

“இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சனையாக இருக்குகிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளை பெற்ற அஜய் திஷன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், Bigg Boss சத்யா, MJ ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

நாயகனாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் விஜய் ஆண்டனி, தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு: Vijay Antony Film Corporation
தயாரிப்பாளர்: ஃபாத்திமா விஜய் ஆண்டனி
இயக்கம், ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா
எழுத்து: புதிய பரிதி
இசை: விஜய் ஆண்டனி
எடிட்டர்: கண்ணன் பாலு
கலை இயக்கம்: பிரகதீஸ்வரன் பன்னீர் செல்வம்
ஸ்டண்ட் இயக்கம்: பிரபு ஜாக்கி
ஆடை வடிவமைப்பாளர்: மாளவிகா செல்வம்
பாடலாசிரியர்: லாவர்தன்
நடனம்: ஹரிகிரண்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

About Publisher

Check Also

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர …