மே 9 -ஆம் தேதி திரைக்கு வரும் ரோபோ சங்கர் நடித்த ” அம்பி ” கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் ” அம்பி ” மே 9 -ஆம் தேதி ரிலீஸ் T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு ” அம்பி ” என்று பெயரிட்டுள்ளனர். மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நா.ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி மற்றும் பிரபல பாடகர்கள் சைந்தவி, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தேவகோட்டை அபிராமி ஆகியோர் பாடி இருக்கிறார்கள். கலை இயக்குனராக அன்பு பணியாற்றியுள்ளார். வைலன்ட் வேலு ஸ்டண்ட் இயக்குனராகவும், கார்த்திக் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு : T2 மீடியா – F.பிரசாந்தி பிரான்சிஸ். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பாஸர் J எல்வின். படம் பற்றி இயக்குனர் பாஸர் J எல்வின் பேசியதாவது… இது முழுக்க முழுக்க பேமிலி ட்ராமா கலந்த காமெடி திரைப்படம். இந்த கதையின் நாயகன் நிஜத்தில் அம்பியாக ,அப்பாவியாக , பயந்தாங்கோலியாக இருக்க அவனை சுற்றி உள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் தான் அனைத்தும் நடந்தது அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படி மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார், இறுதியில் அம்பியாக இருந்தாரா இல்லை அன்னியனாக மாறினாரா என்பதை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். இந்த கதைப்படி கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்தேன். அவர் சிறப்பாக நடித்துள்ளார். படப்பிடிப்பு சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றது என்கிறார் இயக்குனர் பாஸர் J எல்வின். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விண்வெளி நாயகன் டாக்டர் கமலஹாசன் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கோடை கொண்டாடமாக வரும் 9 – ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. திரைப்பட குழுவினர் அனைவருக்கும் கலந்துகொண்டு படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
Read More »சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
*சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது* சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ …
Read More »சேகர் கம்முலாவின் ‘குபேரா’விலிருந்து வெளியான ‘போய்வா நண்பா’ பாடல் சாதனைகளை படைத்தது!
சேகர் கம்முலாவின் ‘குபேரா’விலிருந்து வெளியான ‘போய்வா நண்பா’ பாடல் சாதனைகளை படைத்தது! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமான ‘குபேரா’விலிருந்து முதல் பாடலான “போய்வா நண்பா” அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது-அது ஏற்கனவே அதிர்வலைகளை உருவாக்குகியுள்ளது! பன்முகத் திறமையாளரான தனுஷ் பாடிய இந்தப் பாடலை புகழ்பெற்ற பாடலாசிரியர் விவேகா எழுதிய வரிகளும், திறமைமிக்க சேகர் வி. ஜே. நடன அமைப்பும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்த்துள்ளன, …
Read More »சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு
சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் …
Read More »“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!
“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்! ‘ஒரு அடார் லவ்’ படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அவர் இப்போது அதைவிட வைரலான தருணத்தில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார். நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜூன் தாஸூடன் …
Read More »நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் …
Read More »பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது.
அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்.. பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது. ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான …
Read More »Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ” ஸ்கூல் “
யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை ” ஸ்கூல் ” பட இயக்குனர்R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ” ஸ்கூல் “ இந்த படத்தில் யோகிபாபு,பூமிகா சாவ்லா,கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர்R. K. வித்யாதரன் யோகி பாபு பற்றி பகிர்ந்தவை…. சமீபத்தில் நடந்த யோகி …
Read More »ஜகதீஷ் ஆமாஞ்சியின் ‘யமன்’ புதிய போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது
ஜகதீஷ் ஆமாஞ்சியின் ‘யமன்’ புதிய போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது இப்போது பாக்ஸ் ஆஃபிஸில் புராண அடிப்படையிலான திரைப்படங்கள் வெற்றி பெறுவது ஒரு வெளியறிய ரகசியமல்ல. இந்த ஒரு அலை மீது சவாரி செய்கிற படம் தான் யமன், ஜகந்நாதா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதுமையான திரைப்படம். இதில் நடிகர் ஜகதீஷ் ஆமாஞ்சி முக்கிய கதாப்பாத்திரத்துடன் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். “தர்மோ ரக்ஷதி ரக்ஷித꞉” எனும் சக்திவாய்ந்த வாசகம் படத்துக்கு …
Read More »ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!
ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! இயக்குநர் ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் புதிய களத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” !! பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் “நாக் நாக்”. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் …
Read More »
Open Mic Tamil Here For Entertainment