Monday , January 13 2025

கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”

கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”  !!MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான  காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக, இப்படத்தை இயக்குகிறார்.

இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், காதல், காமெடியுடன்  ஃபேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

Displaying Pics 3.jpeg

இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி, ஆகாஷ், நிதி ப்ரதீப், திவாகர், யுவராஜ், சுபாஷினி கண்ணன் , விஜே நிக்கி, கலைக்குமார், கிரி துவாரகேஷ், தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, மாதங்கி, கோவிந்தராஜ், விக்னேஷ், ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

ஒரு பாடலைத் தவிர, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

About Maduridevi

Check Also

“தருணம்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு  !!

“தருணம்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு  !!ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக  வெளியாகிறது …