Wednesday , February 12 2025

தமிழக வெற்றிக் கழகம்: பெரும்பாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இன்று (22.12.2024), சென்னை புறநகர் மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊராட்சி 11-வது வார்டின் சார்பாக மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகளுடன் உணவு வழங்கல்

இந்த நிகழ்வினை கழக நிர்வாகிகள் திரு. தனசேகர், திரு. ராஜசேகர், திரு. சந்துரு மற்றும் திரு. உதயா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கழகக் கொடியேற்றம் நிகழ்ந்ததுடன், அதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்கள் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் மதிய உணவையும் வழங்கினார்.

முன்னணி நிர்வாகிகளின் பங்கேற்பு

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரு. ECR.P. சரவணன். மேலும் மாவட்ட நிர்வாகிகள் திரு. SV. ரவி, திரு. D. ஜெய், திரு. PM. சுதாகர், திரு. ரவீந்திரன் மற்றும் பெண்கள் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

About Publisher

Check Also

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பல்லாவரம் தொகுதி, சென்னை கிழக்கு மாவட்ட …