Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் எழுதி இயக்குகிறார்.
நடிகர் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, திறமையான நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்றைய பூஜையுடன் கோலாகலமாக படப்பிடிப்பு தொடங்கியது.
“கருடன்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, Lark Studios தயாரிப்பில் சூரி நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் உள்ளார்.
தொழில் நுட்பக் குழு
- எழுத்து, இயக்கம்: பிரசாந்த் பாண்டியராஜ்
- தயாரிப்பு: K. குமார்
- தயாரிப்பு நிறுவனம்: Lark Studios
- இசை: ஹேசம் அப்துல் வஹாப்
- ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
- கலை இயக்கம்: G. துரை ராஜ்
- படத்தொகுப்பு: கணேஷ் சிவா
- சண்டைப்பயிற்சி: மகேஷ் மேத்யூ
- மக்கள் தொடர்பு: யுவராஜ்
உங்கள் எதிர்பார்ப்புகளை ஏற்றி, அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக “மாமன்” விரைவில் திரைக்கு வர உள்ளது.
Maaman #ActorSoori #AishwaryaLekshmi #Rajkiran #LarkStudios #PrashanthPandiyarajan #TamilCinema #KollywoodUpdates #SooriMovies