Breaking News
Home / cinema / Audio launch / பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள ‘ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு

பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள ‘ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு

Press Note – Tamil & English

பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள ‘ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு

மனிதனின் தீரா ஆசைகளை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆல்பம், இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் சரிகம இசை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது

சென்னையின் பிரபல இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரும் (சர்ஜிக்கல் கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்) ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் யு.பி. சீனிவாசன் ‘ஜண்ட மட்டான்’ எனும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த ஆல்பத்தை பார்த்து பாராட்டி அதன் உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம வாங்கி உள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே பி ஒய் சரத் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொள்ள ‘ஜண்ட மட்டான்’ வெளியானது. பல்வேறு துறைகளை சார்ந்த முன்னணியினர் இதில் பங்கேற்றனர்.

மருத்துவத்துறையில் பாரீஸில் தனிப் பயிற்சி பெற்றுள்ள டாக்டர் சீனிவாசன், அடிப்படையில் கலைத்துறையிலும் ஆர்வம் உள்ளவர். முக்கியமாக பாடல், இசையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இதன் காரணமாக தனது பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதன் பின்னணி சுவாரசியமானது. ஆரம்பத்தில் டாக்டர் யூ.பி.எஸ் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். அது நாகர்கோயில் வட்டார வழக்கில் கூறப்படும் ‘நள்ளிரவு பேய்களின் ஆட்டத்தை’ பற்றிய கதை ஆகும். பலராலும் பாராட்டப்பட அக்கதையையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என யோசிக்க உடனே நண்பர்களோடு சேர்ந்து களம் இறங்கியுள்ளார்.

இயக்குனர் ஆரிஷ் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். அப்போது இதில் வருகிற பேய்களின் ஆட்டத்திற்கு ஒரு பாடல் தேவைப்பட, அதை மேலோட்டமாக எடுத்து விடாமல் தனி ஆல்பமாக எடுப்போம், இசையின் ஒரு பகுதியை குறும்படத்தில் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். டாக்டர் யூ.பி.எஸ் நாகர்கோயில் வட்டார வழக்கை நன்கு அறிந்தவர் என்பதால் அவரே ‘ஜண்ட மட்டான்’ என்ற இதற்கான ஒரு பாடலை எழுதிட, இசையமைப்பாளர்கள் H.ஹூமர் எழிலன், H.சாஜஹான் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்திட, மாஸ்டர் சுரேஷ் சித் நடனம் அமைத்திட, அதையும் இயக்கநர் ஆரிஷே இயக்கியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவான இந்த ஆல்பத்தை பார்த்த ‘சரிகம’ அதை வெளியிடுகிறது.

தனது ஆபரேஷன் பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பம் பணி பற்றி டாக்டர் யூ.பி.எஸ் பேசுகையில், “நான் அடிப்படையில் ஒரு டாக்டர். கலையில் சின்ன ஆர்வம் உண்டு, அவ்வளவு தான். ஒரு சிறுகதையாக தொடங்கியது இப்படி குறும்படமாக, ஆல்பமாக உருவாகும் என நானே எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் என் பாட்டி சொன்ன கதையின் விரிவாக்கம் தான் இது. நண்பர்களின் உதவியோடு தான் இதை தயாரித்து உள்ளேன். ஆல்பத்திற்கான பாடல் வரிகளை கூட என்னை வற்புறுத்தி தான் எழுத வைத்தனர். பாட்டி கதையில் சில சமூக கருத்துகளையும் இணைத்து பாடல் வரிகளை அமைத்துள்ளோம். இதில் நிறைய கிராபிக்ஸ் வேலைகளை பார்த்தது எனக்கு சினிமா பற்றிய புது அனுபவமாக இருந்தது. இப்போது ஆல்பமாக பார்த்துவிட்டு எல்லோரும் பாராட்டும் போது மனநிறைவாக, மகிழ்ச்சியாக உள்ளது. இது தரும் உற்சாகம் என்னை இன்னும் இத்துறையில் பயணிக்க வைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.


‘Jandamattaan’, a music album created by renowned medical practitioner Dr. U.P. Srinivasan released in Chennai

The album which portrays human desires through music and dance was released by leading music label Saregama at an event attended by director Chimbu Deven, Producer P L Thenappan, Singer Mano and others

Dr. U.P. Srinivasan, a prominent surgical gastroenterologist and robotic surgeon in Chennai, has created a music album ‘Jandamattaan’. Impressed by the album, leading music label Saregama has acquired its rights.

The album was released at a function in Chennai with director Chimbu Deven, Producer P L Thenappan, Singer Mano, Director Mandhiramoorthy, DoP Gopi Jagadeeswaran, Dance Master Kandhas, Dance Master Sridhar, Actor Mahendran and KPY Sarath guests. Personalities from various fields participated in this event.

Trained in Paris in the medical field, Dr. Sriniivasan also has a keen interest in the arts. With a profound passion for music, he has ventured into creating this album amidst his medical profession.

There is an interesting background to this album. Initially, Dr. U.P.S. wrote a short story. It is about ‘the dance of midnight ghosts’, which is based on Nagercoil folklore. Inspired by the story, he collaborated with friends to turn it into a short film with Aarish directing it.

When it came to the dance of the ghosts in the short film, they needed a song, which Dr. U.P.S. himself penned since he knows Nagercoil dialect well. Music directors H. Hoomar Ezhilan and H. Shajahan composed the song, with Master Suresh Sid taking care of choreography. The song too is directed by Aarish. Produced on a grand budget, the album will be released by Saregama.

Talking about the album amidst his ‘operations’, Dr. U.P.S. said, “I am primarily a doctor. I have always had interest in arts. I started this as a short story, then it became a short film which eventually turned into an album. This is an extension of a story my grandmother told me as a child. I am producing this with the help of my friends. They even forced me to write the lyrics for the album. We have added some social concepts to the grandma story and created the album. Witnessing a lot of graphics work for this album is a new experience in cinema for me. Now I am satisfied and happy when everyone appreciates the album. I hope the enthusiasm it gives will make me travel further in this sector.”


About Publisher

Check Also

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !! ‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் …