Tuesday , January 21 2025

Nails ‘n Beyond Grand Opening at Phoenix Marketcity with Celebrities!

தோல் பராமரிப்பிற்கான புதிய பிராண்ட் ‘ஸ்டார் சீக்ரெட்ஸ்’: பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நேச்சுரல்ஸ் அறிமுகம்—-ஸ்டார் சீக்ரெட்ஸ் மற்றும் நெயில்ஸ் என் பியோண்ட் திறப்பு விழாவில்இணை நிறுவனர்கள் வீணா குமரவேல், சி.கே.குமரவேல், நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்பு-சென்னை, மே 2,2024: -அழகு மற்றும் முடி அலங்காரத் துறையில் இந்தியாவின் முன்னணி சலூனாக திகழும் நேச்சுரல்ஸ், தோல் பராமரிப்பு பிராண்டான ஸ்டார் சீக்ரெட்ஸ் என்னும் பிராண்டை சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அறிமுகம் செய்தது.அங்குள்ள நெயில்ஸ் என் பியோண்ட் சலூனில் இந்த பிராண்ட் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஸ்டார் சீக்ரெட்ஸ் மற்றும் நெயில்ஸ் என் பியோண்ட் திறப்பு விழாவில் இணை நிறுவனர்கள் வீணா குமரவேல், சி.கே.குமரவேல் மற்றும் நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகை அதுல்யா ரவி, நடிகர்கள் சுனில் ரெட்டி, வைபவ் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, பாடலாசிரியர் ஐக்கி பெர்ரி மற்றும் நமீதா மாரிமுத்து உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் கீழ்தளத்தில் ஸ்டார் சீக்ரெட்ஸ் மற்றும் நெயில்ஸ் என் பியோண்ட் சலூன் 1400 சதுர அடியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட சலூனில் இரண்டு பிராண்டுகளின் அழகு சாதனப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு வாடிக்கையாளர்கள் விரும்பும் தோல் மற்றும் அழகு பராமரிப்பிற்கான அனைத்து பொருட்களும், நகங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கான அழகு சாதனப் பொருட்கள் என ஏராளமானவை உள்ளன. மனதுக்கு அமைதியான சூழலுடன் மிகவும் அழகாக இந்த சலூன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தோல் பராமரிப்பு அல்லது நகப் பராமரிப்பு போன்றவற்றை விரும்புவோருக்கு இந்த சலூன் இணையற்ற அனுபவத்தை வழங்குவதோடு ஒவ்வொரு சிகிச்சையும் மிகுந்த கவனமுடன் நிபுணத்துவமிக்க கலைஞர்களால் நேர்த்தியாக செய்யப்படுகிறது.இணை நிறுவனர் சிகே குமரவேல் புதிய அறிமுகம் குறித்து கூறுகையில், அழகு மற்றும் சலூன் துறையில் 24 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் எங்களின் ஸ்டார் சீக்ரெட்ஸ் என்ற தோல் அழகு பராமரிப்பு பிராண்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் இங்கு தோல் பராமரிப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சலூன் பிரிவில் சிறந்து விளங்கும் நெயில்ஸ் என் பியோண்ட் உடன் எங்கள் பிராண்டுகளையும் சேர்த்து ஒரே இடத்தில் நாங்கள் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், தோல் பராமரிப்பு முதல் நக பராமரிப்பு வரை அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் நாங்கள் வழங்க இருக்கிறோம். மேலும் நக அழகியல் முதல் ரிஃப்ளெக்சாலஜி வரை, லேசர் சிகிச்சைகள் முதல் CO2 லேசர் சிகிச்சை வரை, ஒவ்வொரு சேவையும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப இங்கு செய்யப்படும் என்று தெரிவித்தார். ஸ்டார் சீக்ரெட்ஸ் பற்றி: ஸ்டார் சீக்ரெட்ஸ் அழகு சாதனப் பொருட்கள் உங்களுக்கு சிறந்த தோற்றத்தையும் அழகையும் தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. எங்கள் நிபுணர் குழு உங்கள் தோலுக்கு ஏற்ப மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறிவியல் ரீதியாக மேம்பட்ட தீர்வுகளை வழங்குகிறது.

NailsnBeyond #GrandOpening #PhoenixMarketcity #Celebrities #NikkiGalrani #IykkiBerry #Redin #NamithaM #NailArt #BeautyDestination #GlitzAndGlamour #ExclusiveEvent

About Publisher

Check Also

Capture Every Live Moment: OPPO Reno13 Series Launched in India with New MediaTek Dimensity 8350 Chipset and AI-Ready Cameras

Capture Every Live Moment: OPPO Reno13 Series Launched in India with New MediaTek Dimensity 8350 …