சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற காமிக் கான் இந்தியா விழாவில்
–––––––
எண்ட்வார்ஸ் ஆங்கில நாவலின் தமிழாக்கம் செய்யப்பட்ட
இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்:
புத்தகத்தை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
- மதன் கார்க்கியின் மொழி நடை எண்ட்வார்ஸ் தொடருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது
- இந்த பிரமாண்ட புத்தக வெளியீட்டு விழாவின்போது அனைத்து ஓடிடி தளங்களிலும் ஒளிபரப்பாகும் தமிழ் விளம்பர பாடல் வெளியிடப்பட்டது
சென்னை பிப். 17– சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற காமிக் கான் இந்தியா விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காமிக் பிரியர்களுக்காக ‘‘எண்ட்வார்ஸ்: வால்யூம் 2 – டார்க் கான்குவெஸ்ட்’’ (Endwars: Volume 2 – Dark Conquest) என்னும் ஆங்கிலப் புத்தகத்தையும், மற்றொரு ஆங்கிலப் புத்தகமான ‘‘எண்ட்வார்ஸ்: தி சூஸன் ஒன்’’ (Endwars: The Chosen One – Volume 1) என்னும் புத்தகம் பல்துறை மன்னன் மதன் கார்க்கியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘‘இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்’’ (Irudhipor – Mannavan Oruvan) என்னும் பெயரிடப்பட்ட இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டு அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இந்த காவிய சரித்திரப் புத்தகங்களை என்ஜினியர், தொழில் அதிபர், அரசியல்வாதி மற்றும் குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்காவின் இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட அமிர்தராஜ் செல்வராஜ் எழுதியுள்ளார். அறிவியல் புனைகதைகள் மற்றும் பரபரப்பான கதைகளின் உலகத்தை கருத்தரித்து வடிவமைக்கும் அசாதாரண திறனுடன், அமிர்தராஜ் இந்த புத்தகத்தின் தலைசிறந்த ஆசிரியராக உருவெடுத்துள்ளார். இந்த புத்தகங்கள் தொடர்பான ‘வீரா’ என்னும் விளம்பரப் பாடல் ஒன்றும் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், இந்தப் புத்தக வடிவமைப்பில் இடம் பெற்றுள்ள கலைஞர் சவுரப் சவான் மற்றும் இணை எழுத்தாளர்கள் மெர்லின் ஜெமிமா மற்றும் விக்டர் ஜெயராஜ் உட்பட எண்ட்வார்ஸின் திறமையான குழுவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘எண்ட்வார்ஸ்’ புத்தகத்தில் உள்ள அழுத்தமான கதாபாத்திரங்கள் படிப்பதற்கு மிகுந்த உற்சாகத்தையும், சிறந்த அனுபவத்தையும் ஏற்படுத்துகின்றன. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்பதைக் கடந்து, ஒரு புத்தக வாசிப்பாளர் என்பதன் அடிப்படையில் இந்தக் கதைகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன. ‘எண்ட்வார்ஸ்’ சினிமாப் படம் போன்ற சுறுசுறுப்பையும் கிராபிக் நாவல்களின் அதிவேக உலகத்தையும் ஒருங்கிணைத்து, வாசகர்களுக்கு தனித்துவமான செயல், சூழ்ச்சி மற்றும் அழகான தமிழ் வார்த்தைகளின் உண்மையான பயன்பாடு ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த தொடரானது அதன் முந்தைய கதைக்களத்தின் அடித்தளத்தைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இது விவரிக்கப்படாத பல பகுதிகளுக்கு பரந்து விரிந்து செல்கிறது. எனவே காமிக் ஆர்வலர்கள் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும். ‘இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்’ என்பது ஒரு மொழியியல் அற்புதம், புதுமையின் பிரதிபலிப்பு மற்றும் ஒலிகளைப் பயன்படுத்தி ஒரு வசீகரிக்கும் தமிழ் தழுவலை உருவாக்கி, மொழியில் பலதரப்பட்ட கதை சொல்லலுக்கான கதவுகளைத் திறந்துள்ளது. இந்த முயற்சியானது சினிமா மற்றும் காமிக்சுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைக் கொண்டாடும் ஒரு கூட்டுப் பயணமாகும், மேலும் ‘எண்ட்வார்ஸ்’ சரித்திரத்தில் இந்த அற்புதமான தருணத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன் என்று பேசினார்.
எண்ட்வார்ஸ் பிரபஞ்சத்தின் பின்னால் உள்ள மனிதரும், எழுத்தாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.யும், -குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்காவின் இயக்குனருமான அமிர்தராஜ் செல்வராஜ் இந்த படைப்பு குறித்து அனைவரிடமும் பேசுகையில், எண்ட்வார்ஸ் உலகத்தை உருவாக்குவது என்பது அன்பின் உழைப்பு ஆகும். ஒரு எழுத்தாளராக, மிகுந்த கலைநயத்துடன் இந்தப் புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். எனது இந்த புத்தகத்திற்கு சென்னை காமிக் கான் விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் தொடர்ச்சி ஒரு டிஸ்டோபியன் எதிர்காலத்தை ஆராய்கிறது, ஏஞ்சலோ என்ற கமாண்டர் கானர்ஸ்டோனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. எண்ட்வார்ஸ் பார்வையை உயிர்ப்பிப்பதில் உறுதுணையாக இருந்த லோகேஷ் கனகராஜுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதன் கார்க்கியின் தமிழ் மொழிமாற்றப் பணியானது முத்திரை பதித்துள்ளது. இது அனைத்து வாசகர்களும் எளிதாக படிக்கக்கூடிய வகையில் உள்ளது. ‘இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்’ என்பது வெறும் மொழிபெயர்ப்பல்ல; இது தமிழ் கதைசொல்லலின் மொழியியல் செழுமைக்கான ஒரு ஆழமான பயணம் என்று பேசினார்.
புகழ்பெற்ற பாடலாசிரியர் மற்றும் உரையாடல் எழுத்தாளர் மதன் கார்க்கி பேசுகையில், ‘இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்” (மன்ணில் இருந்து ஒவன்) என்ற தலைப்பில் ‘எண்ட்வார்ஸ்: தி சூஸன் ஒன் – வால்யூம் 1’இன் மொழி பெயர்ப்பு பயணத்தைத் தொடங்குவது புதுமை மற்றும் மொழியியல் ஆய்வுகள் நிறைந்த ஒரு கலை அம்சம் ஆகும். தமிழில் முதல் அறிவியல் புனைகதை கிராபிக் த்ரில்லரை ஆராய்வதற்கு வாசகர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை உருவாக்க நாங்கள் விரும்பினோம். இந்த முயற்சியானது கதைக்களத்தை தெரிவிப்பது மட்டுமல்ல, தமிழ் பேசும் வாசகர்களுடன் ஒரு சிறப்பு தொடர்பைத் தூண்டும் அதே வேளையில் அசல் படைப்பை பாதிக்காத வகையில் உள்ளது. ‘இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்’ காமிக் ஆர்வலர்களின் கற்பனையை மட்டும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், கிராபிக் நாவல் வகைக்குள் தமிழ் கதை சொல்லலில் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த பயணம் கதைகளை வடிவமைப்பதில் மொழியின் சக்திக்கு சான்றாக உள்ளது மற்றும் பலதரப்பட்ட வாசகர்களை ‘எண்ட்வார்ஸ்’ என்ற வசீகரிக்கும் உலகத்துடன் இணைக்கும் என்று பேசினார்.
சென்னை காமிக் கண்காட்சியில் இந்த புத்தக வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் ஏராளமான காமிக் வாசர்கள் கலந்து கொண்டனர். கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என நிரம்பியிருந்த அந்த இடம் காமிக் புத்தக ஆர்வலர்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. சித்திரக்கதைகளின் வசீகரிக்கும் உலகத்தைக் கொண்டாடும் படைப்பாளிகள் மற்றும் ஆர்வமுள்ள வாசகர்களின் சந்திப்பாக இது அமைந்தது.
இந்த விழாவில் பங்கேற்று இந்த 2 புத்தகங்களையும் வாங்கிய வாசகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கையெழுத்திட்ட பிரதிகளை வழங்கினார். இந்த இரு புத்தகங்களும் வாசகர்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளது மற்றும் எப்போதும் உற்சாகமான சாத்தியக்கூறுகளுக்கு களம் அமைத்துள்ளது.