முதன்முறையாக முடி திருத்தம் செய்யும் தொழிலை மையமாக வைத்து இயக்குனர் கதை கொடுத்திருக்கிறார். படத்தில் ஹீரோ ஆர்ஜே பாலாஜி தன்னுடைய சொந்த ஊரில் முடி திருத்தம் செய்யும் சாச்சாவை பார்த்து பார்த்து முடி திருத்தும் வேலையின் மீது ஆசை ஏற்படுகிறது. இதனால் அவரிடம் முடி திருத்தும் வேலையை கற்றுக் கொள்கிறார். பிறகு ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய படிப்பை முடித்தவுடன் சிங்கப்பூர் சலூன் என்று தன்னுடைய சொந்த ஊரிலேயே சலூன் ஒன்றை துவங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
பின் கஷ்டப்பட்டு போராடி சொந்த சலூனை ஆரம்பிக்கிறார் பாலாஜி. நினைத்தபடியே சிங்கப்பூர் சலன் என்ற பெயரையும் வைக்கிறார். அதற்குப் பிறகு ஆர்ஜே பாலாஜிக்கு வரும் சோதனைகள் தான் படத்தின் சுவாரசியமே. அதை எல்லாம் எப்படி அவர் எதிர்கொள்கிறார்? என்ன நடந்தது? இறுதியில் சிங்கப்பூர் சலூன் பெரிய அளவில் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. ஆர் ஜே பாலாஜி இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக தன்னுடைய மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக, எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை அடுத்து சத்யராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். முதல் பாதையில் பட்டையை கிளப்பி இருக்கிறார் என்றே சொல்லலாம். பின் லால் அவர்களின் கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கிறது. தனக்கு கொடுத்த வேலையை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பின் பாலாஜிக்கு இறுதிவரை துணையாக நிற்கும் நண்பராக வரும் கிஷன் தாஸ் நடிப்பு நன்றாக இருக்கிறது.
இவர்களை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி, ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய் உடைய நடிப்பும் ஓகே. குறிப்பாக லோகேஷ் கனகராஜ், அரவிந்த்சாமி, ஜீவா உடைய கேமியோ பாராட்டுகளை பெற்றிருக்கிறது. தான் எடுத்த கதைகளத்தை இயக்குனர் சிறப்பாக கொடுத்திருக்கிறார். முதல் பாதி நகைச்சுவையாக செல்கிறது. இரண்டாம் பதி எமோஷனலாக செல்கிறது. சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கதை நன்றாக இருக்கிறது.
மேலும், இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகள் நிறைய இருப்பதால் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
தன்னுடைய குலத்தொழில் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசும் வசனங்கள் எல்லாம் கிளாப்சை பெற்று இருக்கிறது. பின்னணி இசையும் எடிட்டீங், ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ஆர் ஜே பாலாவின் சிங்கப்பூர் சலூன் ஒரு நல்ல முயற்சி.