வெளியானது “போர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!
நீங்கள் இதில் எந்தப்பக்கம் ? தேர்ந்தெடுங்கள் உங்கள் பக்கத்தை !!!
இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள “போர்”, படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், வித்தியாசமான சவாலைத் தருகிறது இந்த ஃபர்ஸ்ட் லுக்.
“போர்”, திரைப்படம் கதை சொல்லலின் எல்லைகளைத் மாற்றியமைத்து, நமக்கு ஒரு வித்தியாசமான, பரபரப்பான அனுபவத்தை தரும் படைப்பாக இருக்கும். பார்வையாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை எதிர்கொள்வதற்கும், தேர்வு செய்வதற்கும் ஒரு காட்சி அழைப்பாக இந்த போஸ்டர் செயல்படுகிறது. இதிலிருந்து ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க நீங்கள் தயாரா?.
குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், ‘போர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இயக்குநர் பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
“Por” Unveils First Look – Ask the audience to Pick A Side!
“Por,” a bilingual film directed by Bejoy Nambiar, unveils its first look poster, challenging the audience to “Pick A Side.” It features Arjun Das and Kalidas Jeyaram in the lead, while the Hindi version features Harshvardhan Rane and Ehan Bhatt in the lead role. The visually striking half-and-half poster reflects the film’s exploration of moral complexities and human nature.
“Por” promises a gripping experience, pushing the boundaries of storytelling. The poster serves as a visual invitation for viewers to confront their beliefs and make a choice. Are you ready to pick a side?
Gulshan Kumar, T-Series, Roox Media & Getaway Pictures Production presents ‘Por’ is Produced By Bhushan Kumar, Krishan Kumar, Prabhu Antony, Madhu Alexander, Bejoy Nambiar. The movie is directed by Bejoy Nambiar