தான் பிறந்த வனப் பகுதி யிலிருந்து பிரிந்து வந்து தனியாக ஒரு ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி வருகி றார் லாரன்ஸ். அவர் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட் வுட் ரசிகர். அவரைப் போலவே கவுபாய் ஸ்டைலில் சண்டைபோடு கிறார். அவரது அராஜகத் துக்கு முடிவு கட்ட போலீஸ் திட்டமிடுகிறது. லாரன்சை அவரது கூட்டத்துக்குள் ளேயே நுழைந்து சுட்டுப் பிடிக்க வருகிறார் போலீஸ் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் நேரடியாக போலீஸ் என்று சொல்லா மல் சினிமா டைரக்டர் என்று சொல்லிக் கொண்டு லாரன்ஸ்சிடம் அறிமுகமாகிறார். அவருக்கு சினிமா ஹீரோ ஆசை காட்டி சுய சரிதம் எடுப்பதாக கூறி நடிக்க வைக்கிறார். “வில்லத்த னத்தையே செய்துக் கொண்டிருந்தால் எடுபடாது ஏழை மக்க ளுக்கு நல்லது செய் தால்தான் ஆஸ்கர் அவார்ட் வாங்க முடியும்” என்று சொல்லி லாரன்சை அவரது பிறந்த ஊரான வனக் கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார் எஸ்.ஜே. அப்பகுதியில் காட்டு யானைகளை வேட்டையாடி அட்டகாசம் செய்யும் சட்டாணியை பிடிக்க முடியாமல் வன அதிகாரிகள் திணறுகின் றனர். சட்டாணிக்கு உதவி செய்வதாக கூறி வன கிராம மக்களை அதிகாரி கள் கொடுமை செய்கி றார்கள். அவர்களை விடுவித்தால் சட்டாணி யை தானே பிடித்து தருவதாக லாரன்ஸ் சொல்ல அதை ஏற்று வனக் கிராம மக்களை அதிகாரி விடுவிக்கிறார். இப்போது சட்டாணிக்கும், லாரன்சுக்கும் நேரடி மோதல். நடக்கிறது. சட்டாணியை பிடிக்கும் லாரன்ஸ் அவனை முதல் வரிடம் தான் ஒப்படைப் பேன் என்று கண்டிஷன் போடுகிறார். அதை ஏற்று முதல்வர் வருகிறார். ஆனால் முதல்வர்,” என் அரசியலுக்காக சட்டாணி யை வளர்த்ததே நான் தான், அவனையே பிடித்து தருகிறாயா” என்று வன அதிகாரிக்கு ரெய்டு விடுகிறார். அவனை விட்டுவிட்டு லாரன்சை பிடித்து சட்டாணி என்று அறிவிக்கச். சொல்கிறார் அத்துடன் வனக் கிரா மக்களை கூண்டோடு அழிக்கவும் சொல்கிறார். இந்த விஷயம் அறிந்த லாரன்ஸ் எடுக்கும் முடிவு என்பது அதிர்ச்சி தருவதாக அமைகிறது.
கார்த்திக் சுப்பராஜ் வித்தி யாசமான படங்கள் தருபவர் என்ற எண்ணம உள்ளது அதை நிரூபிக்க இதிலும் படாதபாடுபட்டு ஓரளவுக்கு கரை சேர்கி றார். படத்தின் முதல் பாதியில் என்ன கதை என்பதை யாரும் யூகித்து விடக் கூடாது என்பதற் காக டமால் டுமில் என லாரன்ஸின் அதிரிபுதிரி ஆக்ஷன் காட்சிகள் கட்டவிழ்த்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா போலீஸ் என்று முதல் காட்சியில் சொல்கிறார்கள். அதன் பிறகு திடீரென்று லாரன்ஸ் முன் வந்து நின்று, “நான் சினிமா டைரக்டர் உங்களின் வாழ்க்கை சரிதத்தை படமாக்கப் போகிறேன்” என்கிறார்.
பிறகுதான் அவர் லாரன்சை பிடிக்க வந்த போலீஸ் என்று தெரி கிறது. ஆனால் கையில் கேமிராவை வைத்துக் கொண்டு லாரன்சை வைத்து படமெடுக்க தொடங்கி விடுகிறார். ” மக்களுக்கு நல்லது செய் தால்தான் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக் கும்” என்று சூர்யா உசுப்பிவிட அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று லாரன்ஸ் கேட்க “வனக் கிராமத்துக்கு சென்று அங்குள்ள மக்களை வன அதிகாரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்” என்கிறார் சூர்யா. முதலில் தயங்கும் லாரன்ஸ் பிறகு ஒ கே சொல்லிவிட்டு புறப்படுகிறார்.
வனப்பகுதிக்கு சென் றதும் புது எபிசோட் ஆரம் பிக்கிறது. காட்டுக்குள் யானைகளை கொல்லும் சட்டாணியுடன் சண்டை செய்ய வேண்டியதாகிறது. சட்டாணியின் கூட்டாளி கள் என்று வனக் கிராம மக்களை வன அதி காரிகள் கொடுமை செய் வதை கண்டு அவர்களை விடுங்கள் சட்டாணியை நான்.பிடித்து தருகிறேன் என்று சவால் விடுகிறார் லாரன்ஸ். சவாலை அடுத்து சட்டாணிக்கும் லாரண்சுக்கும் சண்டை ஸ்டார்ட் ஆகிவிடுகிறது
குரங்குபோல் தாவி பறந்து வரும் சட்டாணியின் தோற்றமே .பயமுறுத்து கிறது. யானைகளை பின்தொடர்ந்து சென்று சத்தம் எழுப்பி பயமுறுத் துவதும் , லாரன்சும் சட்டாணியும் மோதிக் கொள்வதும் பரபரப்பு.
சட்டாணியை பிடிக்கும்.லாரன்ஸ் அவனை சி எம்மிடம்தான் ஒப்படைப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதும் ஏதோ அவரிடம் லாரன்ஸ் அவார்ட் வாங்கப் போகிறார் என்று பார்த் தால் லாரன்சையே போட்டுத் தள்ளும்படி ஆர்டர் போடுவது டிவிஸ்ட்.
கட்சி நிர்வாகிகளை அந்த பெண் சி எம் செருப்பை கழட்டி அடிப்பதெல்லாம் எங்கேயோ கேட்டது போலவே உள்ளது. அது சரி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் யாரைச் சொல்கிறார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
நிமிஷா சாஜயன் பாத்திரத்தோடு ஒன்றி விடுகிறார். மற்ற பாத்தி ரங்கள் சொன்னதை கிளிப்பில்லைபோல் செய்திருக்கிறார்கள்
எஸ்.திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. 1973 காலகட்டத்துக்கு ரசிகர் களை அழைத்துச் செல் கிறது.
ஏழைகளுக்கு நல்லது செய்தால் உன்னை உலகம் போற்றும் என்ற ஒற்றை வரிதான் கதை யின் கருவாக வைத்திருக் கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதை கழுத்தை சுற்றி மூக்கை தொடுவதுபோல்.நீட்டி முழக்கி சொல்லி இருக் கிறார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – ஹாலிவுட் கவுபாய் இமிடேஷன்.