நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தினை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியை உங்கள் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த அதிரடி களியாட்டம் பெரிய திரைகளை ஒளிர செய்யும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் டீசரை வெளியிட்டதிலிருந்து பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த அதிரடி பொழுதுபோக்கு திரைப்படத்திலிருந்து மேலும் கூடுதலான அம்சங்களை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அந்த டீசர் – பார்வையாளர்களுக்கு சலார் உலகில் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை வழங்கியது.ரசிகர்களின் புத்திசாலித்தனமான சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் அர்ப்பணிப்புடன் தயாராகி வருகிறது. இதற்கு சான்றாக இந்நிறுவனம் தற்போது ‘யுவா’, ‘காந்தாரா 2’, ‘ரகு தாத்தா’, ‘ரிச்சர்ட் ஆண்டனி’ உள்ளிட்ட பல படைப்புகளை தயாரித்து வருகிறது. இதனுடன் ‘கே ஜி எஃப் 3’, ‘சலார் -பார்ட் 2’ மற்றும் ‘டைசன்’ ஆகிய படைப்புகளின் மீதும் அதிதீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தின் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ரசிகர்களின் மற்றும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை கூடுதலாக அதிகரிக்கும் வகையில் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் நடிக்கும் ‘சலார் -பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வசீகரிக்கும் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டருடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா அனுபவங்களில் சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயரும் ஒன்றாகும். இந்த திரைப்படம் ‘கே ஜி எஃப்’ என எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், பாகுபலி சூப்பர் ஸ்டார் பிரபாஸ், ‘கே ஜி எஃப்’, ‘காந்தாரா’ ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் ஆகியவற்றின் கூட்டணியில் வெளியாகும் சிறந்த படைப்பு இது.’மாஸ்டர் ஆஃப் ஆக்சன்’ பிரசாந்த் நீல், ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் முதன் முறையாக இது போன்ற காவிய படைப்பில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த கூட்டணி அதிரடி படைப்புகளை வழங்குவதை உறுதியளிக்கிறது. மேலும் பார்வையாளர்களை மயக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது.ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ திரைப்படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உலகெங்கும் உள்ள திரைப்பட பார்வையாளர்களுக்கு ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ சிறந்த கிறிஸ்மஸ் பரிசாக அமையும் என்பது உறுதி.
Home / cinema / Cinema News / *பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு*
Check Also
நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது
நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது …