லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் திடீரென எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்.ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பதும், குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இது குறித்து கேள்விப்பட்ட சுபாஷ்கரன் அவரது அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைகா சுபாஷ்கரன் தெரிவித்த போது அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.தாய் உள்ளத்தோடு ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் வளர்ந்து வரும் குழந்தைகளின் நலனுக்காக உடனடியாக ஒரு கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்த சுபாஸ்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Check Also
Icon Cine Creations LLP Presents ‘Mayal’: A Socially Impactful Film by APG Azhumalai Featuring ‘Myna’ Fame Sethu
Icon Cine Creations LLP proudly presents ‘Mayal,’ a thought-provoking film directed by APG Azhumalai, starring …