Home / cinema / Cinema News / மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படம் சார்பாக #WearHelmetRally நிகழ்ச்சி நடத்தப்பட்டது

மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படம் சார்பாக #WearHelmetRally நிகழ்ச்சி நடத்தப்பட்டது

*!*நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வெப்பன்’. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.தயாரிப்பு நிறுவனம் சார்பாக இன்று (27.08.2023) காலை 6 மணிக்கு #WearHelmetRally நிகழ்வு நடத்தப்பட்டது. இதனை நடிகர்கள் வசந்த்ரவி, தான்யா ஹோப் மற்றும் தயாரிப்பாளர் மன்சூர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். சாலையில் வாகனம் ஓட்டும் போது பாதுகாப்பாக ஓட்டுவதும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்துவதே இந்த ரேலியின் நோக்கம். ஓஎம்ஆர்ரில் தொடங்கிய இந்தப் பயணம் தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில் முடிந்தது. இதில் பங்கு கொள்ள ராயல் என்ஃபீல்ட் ரைடர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

About Publisher

Check Also

Om Sivam – An Unusual Love Story Produced in Three Languages!

Om Sivam – An Unusual Love Story Produced in Three Languages! Om Sivam – A …