பரத், வாணிபோஜன் இருவரும் திருமணம் செய்துகொள்வது பற்றி தனியாக சந்தித்து பேசுகின்றனர். பரத் தொழிலில் நஷ்டம் அடைந்தது பற்றி வாணியிடம் வெளிப்படையாக சொல்கிறார். இதற்கிடையில் வாணியின் தந்தை போனில் அழைத்து பரத்தை மணக்க சம்மதிக்காதே என்கிறார். ஆனால் வாணி திருமணத்துக்கு சம்மதிக் கிறார். ஆனால் இருவருக்கும் சுமூகமாக வாழ்க்கை அமைய வில்லை. எந்நேரமும் சண்டை போடுகின்றனர் . கோபத்தில் வாணியை பரத் தள்ளிவிட அவர் இறந்து விடுகிறார். பிணத்தை மறைக்க போராடுகிறார் பரத். அப்போது வீட்டுக்கு இரண்டு நண்பர்கள் வருகின்றனர். அதன்பிறகு நடப்பது என்ன என்பதை குழப்பத்துடன் படம் விளக்குகிறது.
படம் தொடங்கி நான்கு சீன், ஒரு பாட்டு முடிந்தவுடன் கொலை விவகாரம் ஆரம்பமாகிவிகிறது. வாணி போஜனை பரத் இழுத்து சுவற்றில் மோதி சாய்க்க அதில் அவர் உயிரிழக்கிறார். அப்போது வீட்டுக்கு நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார். அவர்களுக்குள் நடக்கும் விவாதங்கள் கொஞ்சம் கலகலப்பையும்.கொஞ்சம் கடுப்பையும் கிளப்புகிறது.
விவேக் பிரசன்னா அப்பாவித்தன மாக பேசி கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஆனால் எல்லா படத்தில் ஒரே பாணியில் நடிப்பது நீண்ட நாளுக்கு தாக்குபிடிக்காது. .
வீட்டுக்கு வரும் விவேக்கிடம் மனைவியை கொன்று வீட்டுக்குள் வைத்திருக்கும் பரத் சகஜமாக பேசிக்கொண்டிருக்கிறாரே என்று ஆடியன்ஸ் குழப்பத்தில் இருக்க கிளைமாக்சில் அதற்கு பதில் தருகிறார் இயக்குனர்.
டேனி பூப் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு பரத் வீட்டுக்கு வர அந்த கேரக்டரும் மனைவியை ஏமாற்றும் கேரக்ட ராக அமைந்திருப்பது சலிப்பு. கிளைமாக்சில் நடக்கும் டுவிஸ்ட் அதுவரை பார்த்த எல்லா சீன்களையும் கவிழ்த்து போட்டு விடுகிறது. ஆனால் ஜீரணிக்கத் தான் முடியவில்லை.
பரத் நடிக்கும் 50வது படமென் றாலும் அவருக்கு பேர் சொல்லும் படமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.வாணியும், பரத்தும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதுதான் மிச்சம்..
ராதாரவி, சுவாயம் சித்தா ஒரே காட்சியில் தலைகாட்டுகின்றனர்.
:ஆர் பி.பாலா, கவுசல்யா பாலா தயாரித்திருக்கிறார்கள்.
ரோன்னி ரஃ பேல் இசையில் காதல் பாடல் இனிக் கிறது ஆனால். பின்னணி இசையில் அதிரடி காட்சிகளில் ரொம்பவே அடக்கி வாசித்து பில்டப் செய்யத் தவறியிருக்கிறார்.
பி.ஜி.முத்தையா பளிச்சென ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரே வீட்டுக்குள்ளேயே முழுகதையையும் சுற்றி சுற்றி படமாக்கியிருக்கிறார்.
ஆர். பி.பாலா கிளைமாக்ஸ் சஸ்பென்சை உடைக்கும்போது மணிக்கணக்கில் பார்த்த அத்தனை காட்சிகளுமே கற்பனை என்று சொல்லும்போது தலைசுற்றி விடுகிறது.
லவ் 💘 – கோபம்.😡
⭐⭐⭐