ஹரிஸ்கல்யான், எவானா ஒரே.ஐடி நிறுவனத்தில் வேலை செய்கின் றனர். 2 வருடமாக டேட்டிங் செய்கின்றனர். ஒருகட்டத்தில் எவானாவிடம் ஹரிஸ் காதல் சொல்கிறார். அவரும் ஏற்கிறார். தாய் நதியாவுடன் எவானாவை பெண் பார்க்க ஹரிஸ் வருகிறார். ஆனால் நதியா.சொல்லும் ஒரு வார்த்தையை கேட்டு ஹரிசை மணக்க மறுக்கிறார் எவானா. பின்னர் ஒரு ஐடியா சொல்கிறார் எவானா. இரு குடும்பமும் சுற்றுலா சென்று அப்போது நதியாவுடன் பழகிப்பார்த்து அவரது செயல்பாடு. பிடித்திருந் தால் ஹரிசை மணப்பதாக சொல்கிறார். நதியாவிடம் இதை கூறாமல் சுற்றுலாவுக்கு அழைத்து வருகிறார் ஹரிஸ்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நதியாவுக்கு தெரிய வர அவர் கோபம் ஆகிறார். திரும்பி சென்று விடலாம் என்று ஹரிஸ் எண்ணும்போது நதியா வும், எவானாவும் மட்டும் தனியாக சுற்றுலா சென்று பழக முடிவு செய்கின்றனர்.அவர்கள் இருவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் தவிக்கும் ஹரிஸ் அவர்களை தேடி அலைகிறார். இருவரையும் ஹரிஸ் கண்டுபிடித் தாரா, நதியா, எவானா இருவரும் மனம் ஒத்துப்போனார்களா , ஹரிஸ், எவானா கல்யாணம் செய்ய முடிந்ததா என்ற கேள்வி களுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
கிரிக்கெட் வீரர் தல தோனி மனைவி சாக்ஷி தோனி தயாரித் திருக்கும் தமிழ் படம் எல் ஜி எம். கதை கருவும் அவர் எழுதியது தான்.குடும்பப்பாங்கான படம் எடுக்க வேண்டும் என்று எண்ணிய சாக்ஷி, கதையையும் அதற்கு ஏற்பவே தேர்வு செய்திருக்கிறார்.

ஹரிஸ் கல்யாண், எவானா இளம் காதல் ஜோடிகளாக வலம் வருகின் றனர். ஆனால் வழக்கமான முத்தம் பரிமாறும் ஜோடியாக இல்லாமல் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று ஆலோசிக்கும் ஜோடியாக மாறியிருப்பதால் நடிப்புக்கும் நிறைய.வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது

தாய் நதியாவிடம், தான் எவானாவை காதலிப்பதுபற்றி சொல்லி அவரை பெண் கேட்க அழைத்துச் செல்ல அங்கு எவானாவை பார்த்து பிடித்துப் போக, “என் பொண்ணு மாதிரி உன்னை பார்த்துக்கொள்வேன் என்று நதியா சொன்னதும் ஷாக் ஆகும் எவானா தனிக்குடித்தனம் நடத்தவே விரும்புவதாக ஹரிசிடம் சொல்லி திருமணத்துக்கு எவானா நோ சொல்வதும் அதைக்கேட்டு ஷாக் ஆகும் ஹரிஸ் என் அம்மாவைவிட்டு தனியாக வரமாட்டேன் என்று கோபமாக சொல்லிவிட்டு ஹரிஸ் வெளி யேறுவதும் கதையின் அடுத்த கட்டத்துக்கு காட்சியை நகர்த்து கிறது.
சுற்றுலா சென்று பழ்கி பார்க்கும் ஐடியாவை எவானா சொல்வதைத் கேட்டு நதியாவை ஹரிஸ் அழைத்து வருவதும் இரு குடும்பமும் கூர்க் பகுதிக்கு சென்ற பிறகு நதியாவுக்கு உண்மை தெரிய வர அவர் புயலாய் சீறி உடனே சுற்றுலாவை கேன்சல் செய்யச் சொல்வதும் அடுத்து என்னவெல்லாம் நடக்குமோ என்ற பரபரப்பு ஏற்படுகிறது.

திடீரென்று திட்டம் உல்டாவாகி நதியா, எவானா இருவர் மட்டும் கோவா செல்வதும் அதன் பிறகு அவர்கள் இருவர் அடிக்கும் லூட்டியும் படத்துக்கு புது நிறத்தை தருகிறது. 90களின் நதியாவாக மாறி மார்டன் உடை, டான்ஸ் என்று கலக்குகிறார். பப்பில் தண்ணியடித்துவிட்டு நதியா போடும் ஆட்டம் துள்ளல் நிறைந்தது இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியா என்று ஆச்சர்யப்பட வைக்கிறார். இன்னும் சொல்லப்போனால் எவானாவை காணாமல் செய்து விடுகிறார்.

எவானாவுக்கு அந்த முறைப்பு மட்டும் இல்லாவிட்டால் நதியா வின் நடிப்பு கடலில் கரைந்தி ருப்பார். ஹரிஸ் கல்யாணுக்கு அம்மா நதியாவையும், எவானா வையும் தேடுவதே கடைசி வரை வேலையாக இருக்கிறது.
யோகிபாபு பஸ் டிரைவராக வந்து கலகலக்க வைக்கிறார். அவ்வப் போது அவர் அடிக்கும் பஞ்ச்சும் தோனி பற்றி அடிக்கும் கமென்ட்டும் அரங்கை அமர்க்களப் படுத்துகிறது
இப்படத்தை சாக்ஷி தோனி தயாரித்திருக்கிறார்.
ரமேஷ் தமிழ்மணி படத்தை மாமியார்,.மருமகள் சடுகுடுவாக இயக்கியிருக்கிறார். திரைக்கதை சென்னையில் தொடங்கி கூர்க் சென்று அங்கிருந்து கோவா பயணமாகி இறுதியில் கூர்க் காட்டுப் பகுதிக்குள் செல்வது நீட்டள் அளவையாக நீண்டு. விடுகிறது இயக்குனரே இசையும் அமைத்திருக்கிறார்
விஸ்வஜித் ஒளிப்பதிவு ஓகே.
எல் ஜி எம் யூத்துக்கும், பெரிசுகளுக்குமான படம்.
⭐⭐⭐
