தனா (ரிஷி), மன்னு (கார்த்திக் ) அண்ணன் தம்பிகள். தனாவின் நண்பன் துரை (மாறா). கொலை வழக்கு ஒன்றில் நண்பன் துரைக் காக போலீசில் சரண் அடைகிறான் தனா. மன்னு ரவுடிகள் வட்டாரத் தில் இருந்தாலும் ரவுடியிசம் செய்ய தயங்கி காதலில் விழுகிறான் . ஒரு. கட்டத்தில் துரையை மற்றொரு ரவுடி கூட்டம் அடையாளம் கண்டு கொலை செய்கிறது. அப்போதும் பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் மன்னு ஒதுங்கிச் செல்கிறான். இறுதியில் அவனும் ரவுடி ஆகும் சூழல் வருகிறது. அப்போது அவன் எடுக்கும் முடிவு என்ன? காதல் என்னவாகிறது ? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
வட சென்னை பாணியிலான கதையாகவே உருவாகியிருக் கிறது டை நோ சர்ஸ்.. முதல் பாதி படம் ஜிவ்வென்று பறக்கிறது.
ஓப்பனிங்கிலேயே பஸ்ஸில் ரகளை செய்யும் ரவுடிகளை அந்த பெரிசு அடித்து துவம்சம் செய்து ஓட விடுவது செம்ம க்ரீப்
உதய் கார்த்திக் டூ வீலரை எடுத்துக்கொண்டு ஹீரோயின் சாய் பிரியா முன் பந்தாவாக வீலிங் செய்து அவரை கவர்வதும் ஆனாலும் காதல் சொல்லாமல் ஜோடி போட்டு சுற்றிவிட்டு ஒரு கட்டத்தில் சாய் பிரியா வேறு ஒருவனை காதலிக்க உதய்யிடமே பர்மிஷன் கேட்பதும் ரசிக்க வைக்கிறது
மாறாவை ரவுடிக்கூட்டம் அடையாளம் கண்டு கொண்டு அவரை கொல்ல சுத்துபோடுவதும் அதை புரிந்துக்கொண்டு. அங்கிருந்து தப்பிச் செல்ல செய்யும் தந்திரமும் அடுத்து என நடக்குமோ என்ற திக் திக் நிமிடங்களாக மாறுகிறது.
இரண்டாம் பாதியில் பேசி பேசியே பொழுதை கழிக்கிறார் ஹீரோ உதய். நீ என்ன செய்தாலும் நான் ரவுடியாக மாட்டேன் என்று ஒதுங்கி செல்வதும் அவரை ரவுடியாக்கி போலீசில் சிக்க வைக்க நடக்கும் துரத்தலும் இழுவையாக உள்ளது. கிளைமாக்ஸ் சண்டை காட்சி யிலும். மாறி மாறி பேசுவதும், பந்தயம் கட்டுவதும் போன்ற சீன்கள் ஆக்ஷன் காட்சியின் வேகத்தை குறைக்கிறது.
ரவுடிகளாக வரும் இரண்டு பேரும் முரட்டுத் தனத்தை தங்களது பாணியில் வெளிப்படுத்துவது ஓ கே ஓ. ரிஷி வாய் உதார் காட்டுகிறார்.
ஶ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்தி ருக்கிறார். போ போ சசி இசையில் கானா ஒலிக்கிறது.
ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு நார்மல்.
இயக்குனர் எம் ஆர் மாதவன் ரவுடியிசத்தை சொல்வதா, ரவுடியிசம் வேண்டாம் என்று சொல்வதா என்பதில் குழம்பி இருக்கிறார். ரவுடியிசத்தைத்தான் கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.
டைனோசர்ஸ் – ஓ கே ரகம். ⭐⭐⭐