CAST:
Premgi Amaren – Pradheep
Swayam Siddha – Praveena
Reshma – Annam (Pradheep sister)
Chitthan Mohan – Kuberan
Selva Murugan – Mahadevan
Haritha – Mahalakshmi
Bharathi – Muppidathi
Rajendran – Spy Ramar
Ganasambantham – Judge
Muthupandi – Issaki
Karna Raja – Selvaraj (Pradheep mama)
CREW:
Produced by : Sameer Bharat Ram
Production : Super Talkies
Written & Directed by : Suresh Sangaiah
Cinematographer : R.V. Saran
Editor : Venkat Raajen
Art Director : Vasudevan
Lyrics : Velmurugan
Music : Ragu Raam. M
Background music : Deepan Chakaravarthy
Singers : Gangai Amaren, Veeramani Raju, Diwakar
Dialogues : V. Gurunathan & Suresh Sangaiah
Colorist : Ajith Vedi Baskaran
Sfx : Sathish
Mixing : Raja Nallaiah
PRO: Nikil Murukan
அருப்புக்கோட்டை கிராமத்தின் ஒதுக்கு புறத்தில் தொங்க தொங்க நகை அணிந்துகொண்டு செல்பவரை ஒரு கூட்டம் வழி மடக்கி கொன்று விட்டு நகைகளை கொள்ளை அடித்துச் செல்கிறது. செல்லும் வழியில். பிணத்தை பார்க்கும் பிரதீப் (பிரேம்ஜி) அங்கிருக்கும் செல்போன், சிறிய செயின் ஆகியவற்றை போலீசில் ஒப்படைத்து கொலைபற்றி தகவல் சொல்கிறான். ஆனால்.போலீஸ் அவனையே சந்தேகப்பட்டு.பிடித்து வைத்து, கொலை செய்துவிட்டு நகையை திருடி விட்டதாக அடித்து உதைக்கின்றனர். அடிதாங்க முடியாமல் வாக்கிடாக்கியை திருடிக்கொண்டு தப்பி ஓடுகிறான். கொலை செய்தது யார், நகையை கொள்ளை அடித்தது யார் என்ற விவரம் தெரிய வரும்போது போலீஸ் மட்டுமல்ல ரசிகர்களும் அதிர்ந்து போகின்றனர்.
ரொம்பவும் எளிதான கதை, சிறிய.நடிகர்கள் நடித்த படங்கள் சில சமயம் நெஞ்சை கவரும் வகையில் அமைந்துவிடும் அந்த வரிசையில் இடம் பிடிக்கும் படம் தான் சத்திய சோதனை.
பிரேம்ஜி சோலோ ஹீரோவாக நடித்திருக்கிறார். நல்ல வேளை காமெடி ஹீரோ வேடம் என்பதால் அவரது பேச்சுப், நடிப்பும் வேடிக்கையாகவும் கலகலப் பாகவும் ரசிக்கும்படி உள்ளது.
போலீஸ் நிலையத்தில் கூத்தடிக்கும் சித்தன் மோகன் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்குக்கு நய்யாண்டி செய்கின்றனர். மாஜிஸ்திரேட்டாக வரும் ஞான சம்பந்தன் செய்யும் விசாரணை யும், டுபாங்கூர் வேலைகள் செய்து சாட்சி தயார் செய்யும் போலீசை திட்டி தீர்ப்பது வெடிச் சிரிப்பை வரவழைக்கிறது.
பாட்டியை கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தும் போலீஸ் அவர்தான் நகைகளை திருடியவர் என்று சொல்ல அதுபற்றி ஜட்ஜ் கேட்கும்போது பாட்டி சொல்லும் தெனாவட்டான பதில் அரங்கை அமர்க்களப்படுத்துகிறது
இதற்கு மேல் விமர்சித்தால் கிளைமாக்சை சொல்ல வேண்டியிருக்கும் அது படம் பார்க்கும்போது சஸ்பென்சை சப்பென்றாக்கிவிடும்.
சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத் ராம் தயாரித்திருக்கிறார். ரகுராம் எம். தீபன் சக்ரவர்த்தி இசையமைத்தி ருக்கின்றார். ஆர்.வி சரண் ஒளிப்பதிவு எதார்த்தம்
சுரேஷ் செங்கையா பெரிய பட்ஜெட் கதை சிறிய பட்ஜெட்டில் சிரிக்க சிரிக்க சிரிக்க இயக்கி யிருக்கிறார் .
சத்திய சோதனை – காமெடி படம்