நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இளம் பெண் உள்பட 4 கொலைகள் நடக்கிறது. இந்த வழக்கு மீதான விசாரணை சி பி ஐ யின் தரப்படுகிறது. சிபிஐ அதிகாரி நட்டி உடனடியாக விசாரணையில் இறங்குகிறார். இந்நிலையில் அவரை கொல்ல் கொலைகாரன் முயல்கிறான் அதிலிருந்து தப்பிக்கும் நட்டி இறுதியில் கொலைகாரனை பிடித்தாரா, எதற்காக கொலைகள் நடக்கிறது என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் சொல்கிறது.
சஸ்பென்ஸ் திரில்லர் கதைகள் எடுக்க ஒரு டெக்னிக் இருக்கிறது அதை இன்ஃபினிட்டி படத்தில் இயக்குனர் பயன்படுத்தி இருக் கிறார். ஆனால் ஆரம்பத்திலேயே சில குழப்பமான நகர்வால் சொல்ல வந்த விஷயத்தில் தெளி வில்லாமல் திணறியிருக்கிறார். முதலில் இரட்டை கொலை என்று சொல்லி பிறகு 3 கொலை ஆகி சில காட்சிகளில் 4 கொலை என அடுக்கிக்கொண்டே போவதால் ஏற்பட்ட குழப்பம்தான் எந்த வழக்குக்காக நட்டி விசரணை செய்துகொண்டிருக்கிறார் என்ற புரிதல் தெளிவாக இல்லாமல் .போகிறது.
மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்க வரும் பெற்றோர் திடீரென்று காணாமல் போவது, அதேபோல் அவர்களை தெனாவட்டாக விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீரென்று கொலை செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுவதும் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி காட்சிக்கு பில்டப் தருகிறது.
முதல் பாதி வரை ரசிகர்களை தெளிவாக குழப்பி இடை வேளைக்கு பிறகு ஒவ்வொரு சஸ்பென்சுக்கும் கொலைகாரனை வைத்தே பதில் சொல்லும்போது லேசாக குழப்பங்கள் தீர்கிறது.
திடீரென்று வித்யா பிரதீப் வில்லி அவதாரம் எடுப்பது ஷாக். பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை காரனை கையில் போட்டுக் கொண்டு வித்யா செய்யும் அந்த குழந்தை கொலைகள் திகிலை கிளப்புகிறது
சி பி சி அதிகாரியாக வரும் நட்டி துடிப்பாக விசாரணைகள் மேற்கொள்கிறார். கொலை காரனை மோட்டார் சைக்கிளில் சேசிங் செய்யும் நட்டி அவனை தப்ப விட்டு நிற்பதும் கடைசிவரை கொலைகாரனை நேரில் வந்து நின்று தன்னை அடையாளம் காட்டும்வரை அவனை பிடிக்காமல் நட்டி தேடிக்கொண்டே இருப்பதும் நட்டி பாத்திரத்தின் கனத்தை குறைக்கிறது.
வி. மணிகண்டன் தயாரித்திருக்கி றார்.
பாலசுப்ரமணியன்.ஜி இசை ஓகே ரகம்
சரவணன் ஶ்ரீ ஒளிப்பதிவு இரவு நேரத்திலும் தெளிவாக காட்சி களை படமாக்கி உள்ளது
இயக்குனர் சாய் கார்த்திக் சஸ்பென்ஸ் த்ரில்லரை சொல் ல வந்து பாதி. கிணறு தாண்டி யிருக்கிறார். திரைக் கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந் தால் குழப்பம் தீர்ந்து விறுவிறுப்பு கூடியிருக்கும் படம் முடிந்துவிட்டது என்று எழுந்தால் அதன்பிறகு 10 நிமிட கதை 2ம் பாகத்துக்கான லீட் சொல்லப்படுவது நீட்டல்.
இன்ஃபினிட்டி – கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் குழப்பம்.