தூத்துக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய திருட்டு செய்து வெட்டியாக சுற்றி வருகிறான் புலிப்பாண்டி (வெற்றி).. அவன் மீது அத்தை மகளும் உறவினர்களும் வெறுப்பு காட்டுகிறார்கள். திடீரென்று ஒரு கொலைப்பழியும் அவன் மீது விழுகிறது. அதிலி ருந்து எஸ்ஸாகி ஐயப்ப சாமிக்கு மாலைபோட்டு நண்பர்களுடன் சபரிமலை செல்கிறாரன். அங்கு இஸ்மாயில் பாயிடம் பம்பர் லாட்டரி டிக்கெட் வாங்கி அங்கேயே தொலைத்து விட்டும் வருகிறான் பாண்டி. அந்த சீட்டு இஸ்மாயி லிடமே கிடைக்கிறது. அதற்கு ரு 10 கோடி பம்பர் பரிசு விழுகிறது. இதையறிந்த இஸ்மாயில் அந்த டிக்கெட்டை புலிப்பபாண்டியிடம் தரவேண்டும் என்று அவனை தேடி தூத்துக்குடி வருகிறார். இதற்கிடை யில் இந்த விஷயம் ஊர் முழுவதும் பரவுகிறது. அந்த பணத்தை அபகறிக்க இஸ்மாயில் மகன் திட்டமிடுகிறான். இன்னொரு பக்கம் ஒரு போலீஸ் புலிப்பண் டியின் நண்பர்கள் பணத்தை எடுக்க திட்டமிடுகிறார்கள். இறுதியில் அந்த பணம் யாருக்கு கிடைத்தது. புலிபாண்டி எடுத்த முடிவு என்ன என்பதற்கு படம் சென்டிமென்ட் டச்சுடன் பதில் சொல்கிறது.
ஜீவி, எட்டு தோட்டாக்கள் படங்களில் நடித்த வெற்றி இதில் புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை படங்களில் சைலான்ட்டாகவே நடித்துக்கொண்டிருந்த வெற்றி இப்படத்தில் என்ன நினைத்தாரோ நடிப்பை வாரி இறைத்திருக்கி றார்ர். அவரது நடிப்பில் பெரிய மாற்றம் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் வசன உச்சரிப்பில் தேற வேண்டிய உள்ளது. அதிலும் அடுத்த படத்தில் தேறி விடுவார் என நம்பலாம். நடனம் கூட முதன் முறையாக ஆடி அசத்தி உள்ளார்.
ஒண்ணுமண்ணா பிரண்ட்ஸ் கிட்ட பழகிட்டு 10 கோடி பம்பர் அடித்த வுடன் “என் பணம்” என்று வெற்றி சொந்தம் கொண்டாடும்போது அவரது நண்பர்கள்போலவே ரசிகர்களும் கடுப்பாகிறார்கள். பணத்துடன் பாய் தப்பிப்போய் விட்டார் என்று அவரை தெருத் தெருவாக வெற்றி தேடிச் செல்வது எதிர்பாராத டிவிஸ்ட்
கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு வெற்றி, ஹரிஷ்பெராடியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு ஒரு பைசா கூட அவருக்கு தராமல் புறப்படுவதும் அதைக்கூட பொருட்படுத்தாமல் கடமை முடிந்தது என்று ஹரிஷ் வீட்டை பார்த்து தள்ளாடியபடி செல்லுவதும் நெஞ்சை நெருடுகிறது.
சில நொடிகளில் காட்சிகள் மாறி யதும்.கனமான இதயம் லேசாகி இறக்கைக்கட்டி மனிதாபிமானம் என்ற வானில் பறக்கத் தொடங்கும் போது அரங்கில்.கைதட்டல் எதிரொலிக்கிறது.
ஹரிஷ் பெராடியை பல படங்களில் வில்லனாகவே பார்த்த கண் களுக்கு அவருக்குள் இப்படி யொரு நடிகன் ஒளிந்திருக்கிறான் என்பதை தனது அமைதியான, பக்குவப்பட்ட நடிப்பால் வெளிப் படுத்தி மிரள வைக்கிறார். அதேபோல் அவரது மனைவியாக வருபவரும் சக குடும்பத்தாரும் இவ்வளவு எதார்த்தமாக நடிப் பதை பார்க்கும்போது இது இயக்கு னரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காட்சிகள் என்பதை உணர முடிகிறது.
ஹீரோயினாக முதன்முறையாக நடித்திருக்கிறார் ஷிவானி. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லாவிட்டாலும் நல்ல அத்தை மகளாக வந்து மனம்.கவர்கிறார்.
ஜி பி முத்து தங்கதுரை போதுமான அளவுக்கு காமெடி செய்திருக்கின்றனர். இன்ஸ்பெக் டராக வரும் அருவி மதன் கெத்து காட்டுகிறார். மறைமுகமாக இப்படம் நல்லதொரு நல்லிணக் கத்தை பேசியிருக்கிறது
எஸ் தங்கராஜா, டி.ஆனந்தஜோதி படத்தை தயாரித்திருக்கிறார்கள்
கோவிந்த் வசந்தா இசையில் ஐப்ப பாடல் உருக வைக்கிறது
கிருஷ்ணாவின் பின்னணி இசை காட்சிகளை விறுவிறுப்பபாக்கி யிருக்கிறது
வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு இதம். அதுவும் சபரிமலை காட்சி களில் தெய்வீகம் கமழ்கிறது
ஒரு லாட்டரி சீட்டை வைத்து மத நல்லிணக்கத்தை கூற முடியும் என்ற இயக்குனர் எம்.செல்வ குமாரின் நம்பிக்கைக்கே அவருக்கு வெற்றியை பரிசிலிக்க லாம். ரசிகர்கள் அதை நிச்சயம் செய்வார்கள்.
பம்பர் : பாடம் தரும் படம் ⭐⭐⭐