Home / cinema / Cinema News / இணையத்தில் வைரலாகும் சான் டி-யின் புதிய ஆல்பம் “லார்ட் போயட்ரி”

இணையத்தில் வைரலாகும் சான் டி-யின் புதிய ஆல்பம் “லார்ட் போயட்ரி”

**தர லோக்கல் பசங்க இசை குழு உருவாக்கி இருக்கும் லார்ட் போயட்ரி*சினிமா படங்களின் பாடல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்குமோ அந்த அளவிற்கு தற்பொழுது ஆல்பம் பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சான் டி என்று அறியப்படும் இசை கலைஞரின் புதிய ஆல்பம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “லார்ட் போயட்ரி” (Lord Poetry) எனும் தலைப்பில் வெளியாகி இருக்கும் சான் டி-யின் புதிய ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. அடென்டன்ஸ், மை நேம் இஸ், கழிவரா, மம்பிள், நோ ஜோக் மற்றும் லார்ட் போயட்ரி என ஆறு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சப்லையர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இருக்கும் லார்ட் போயட்ரி ஆல்பத்தின் மிக்சிங் பணிகளை க்ரோனிக்ஸ், மாஸ்டரிங் பணிகளை ஆகாஷ் ஷ்ரவன், கவர் ஆர்ட்-ஐ மிக்கியும் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆல்பத்தை ஒட்டுமொத்தமாக கே.ஒய்.என். ரெக்கார்ட்ஸ் லேபல் செய்திருக்கிறது. இசை கலைஞரான சான் டி, அல்தாஃப் உடன் இணைந்து கல்லூரி விழாவில் பாடிய பாட்டு அனைவரையும் கவர்ந்தது. இதுவே இவரின் கலைப் பயணத்தின் ஆரம்ப புள்ளி. இதன் தொடர்ச்சியாக தர லோக்கல் பசங்க இசை குழு

உருவாக்கப்பட்டது.இந்த குழுவினர் உருவாக்கிய முதல் பாடல் இணையத்தில் வைரல் ஆகி, இதன் தொடர்ச்சியாக பல்வேறு பாடல்களை வெளியிட்டுள்ளனர். சான் டி-யின் முதல் ஆல்பம் 2021 ஆண்டு வெளியானது. இந்த ஆல்பம் “நான் கத்துக்கிட்ட ஹிப்ஹாப்,” எனும் பெயரில் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.தற்போது வெளியாகி இருக்கும் லார்ட் போயட்ரி என்னும் ஆல்பம் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

About Publisher

Check Also

Icon Cine Creations LLP Presents ‘Mayal’: A Socially Impactful Film by APG Azhumalai Featuring ‘Myna’ Fame Sethu

Icon Cine Creations LLP proudly presents ‘Mayal,’ a thought-provoking film directed by APG Azhumalai, starring …