Home / cinema / Cinema News / 26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் ஒளியேற்றிய லைக்கா சுபாஷ்கரன்!

26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் ஒளியேற்றிய லைக்கா சுபாஷ்கரன்!

26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் ஒளியேற்றிய லைக்கா சுபாஷ்கரன்!

26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்கள் உதவித்தொலை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார் லைக்கா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் .

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை விடுதலை செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கடந்த செவ்வாய்கிழமை (06.06.23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் லைக்கா குழும உப தலைவர் திரு .பிரேம் சிவசாமி மற்றும் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது .

இலங்கை ஜனாதிபதியுடன் விசேட சந்திப்புகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் அழுத்தங்களை பிரயோகித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அயராது பாடுபட்டு லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விடுதலைக்கு வழிவகை செய்துள்ளார்.

பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிய கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தலா 25 லட்சம் ரூபாய்களை தனது தாயார் திருமதி ஞானாம்பிகையின் பெயரில் இயங்கி வரும் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் ஆறரை கோடி ரூபாய்களை வழங்கி வைத்தார்.

About Publisher

Check Also

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது …