Breaking News
Home / Sports / ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7வது சீஸன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7வது சீஸன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7வது சீஸன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் 2016 முதல் நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் திருவிழாவான “தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்”, இதுவரை 6 சீஸன்களை வெற்றிகரமாக கடந்து 7வது சீஸனில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி டி.என்.பி.எல் தொடரின் 7ஆம் ஆண்டு வருகிற ஜூன் 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணிக்கான வீரர்களை கடந்த 6 சீஸன்களாக டிராஃப்ட் முறையில் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால் இந்தாண்டு முதன்முறையாக உலகின் தலைசிறந்த லீக் தொடரான ஐபிஎல் டி20 லீக்கைப் போல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரிலும் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தின் அடிப்படையில் தேர்வு செய்தனர். இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வீரர்களை ஏலத்தின் அடிப்படையில் எடுத்ததில்லை, முதன்முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த பிரம்மாண்ட முயற்சியை நிகழ்த்தி அதில் வெற்றியும் கண்டது.

குறிப்பாக, ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸிற்காக விளையாடி வரும் தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 21.6  இலட்சங்களுக்கு டி.என்.பி.எல்லின் லைகா கோவை கிங்ஸால் வாங்கப்பட்டார்.  இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் ஐபிஎல் ஏலத்தை விட டி.என்.பி.எல் ஏலத்தில் சாய் சுதர்ஷன் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் (ba11sy) பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் , சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் சென்ற ஆண்டு வரை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியாக டி.என்.பி.எல் தொடரில் பங்கேற்று வந்த திருச்சி அணி இந்த ஆண்டு பால்ஸி திருச்சி(BALLSY TRICHY)அணியாக பெயர் மாற்றம் கொண்டு விளையாடவுள்ளது. இந்த அணியை ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த 6 சீஸன்களிலும்  தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற அணிகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.  அதில் டி.என்.பி.எல்லின் அறிமுக சீஸனில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி முதல் வருட கோப்பையை கைப்பற்றியது. ஆனால் அதன் பின்னர் 2017, 2019 ,2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை 4 முறை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தற்போதைய நடப்பு சாம்பியனாகவும் வலம் வருகிறது.  முதல் இரண்டு ஆண்டுகளில் வெற்றியை சுவைக்காத மதுரை அணி 2018ஆம் ஆண்டு சீகம் மதுரை பேந்தர்ஸாக பெயர் மாற்றத்துடன் களமிறங்கி முதன்முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது. சென்ற ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணைந்து லைகா கோவை கிங்ஸ் அணி 6வது சீஸனின் டி.என்.பி.எல் பட்டத்தை பகிர்ந்து கொண்டது

தொலைக்காட்சி ஒளிபரப்பு:  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனல்கள்

டிஜிட்டல் ஒளிபரப்பு:  ஃபேன்கோட் (FANCODE)

ஸ்பான்சர் லிஸ்ட் :

டைட்டில் ஸ்பான்சர்: ஸ்ரீராம் கேபிட்டல்

ஸ்ட்ரன்த் பார்ட்னர்: ஷேரான்ப்ளய்

ஆரஞ்சு கேப் & பர்ப்பிள் கேப் : ஏத்தர்

அசோஸியேட் ஸ்பான்சர் :

  • டிரீம்11
  • பூமர்
  • சோனாட்டா

ஜூன் 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7வது சீஸனில் ப்ளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 32 போட்டிகள் 25 நாட்களில் நடைபெறுகிறது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்படவுள்ளது. குவாலிஃபையர்1 மற்றும் எலிமினேட்டர் சேலம் மைதானத்திலும் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி திருநெல்வேலியிலும் நடைபெறவுள்ளது.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:

மா. ஹரி ஹர சுப்ரமணியன்

அலைபேசி எண்: +91 9443136724

மின்னஞ்சல் முகவரி:  media@tnpremierleague.com

.மணிவண்ணன்

அலைபேசி எண்: +91 9003214904

மின்னஞ்சல் முகவரி: a.manivannan@sportingzenminds.com

அணிகள்:

(ba11sy) பால்சி திருச்சி:

ஆண்டனி தாஸ் (தக்கவைப்பு), தங்கராசு நடராஜன், டாரில், எஸ் ஃபெராரியோ, மோனிஷ் சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன் .வி, கங்கா ஸ்ரீதர் ராஜு .வி, சிலம்பரசன் .ஆர், ஜாஃபர் ஜமால், அலெக்சாண்டர் .ஆர், மணி பாரதி.கே, ராஜ் குமார்.ஆ, ஷாஜகான். எம், ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், அக்‌ஷய் வி ஸ்ரீனிவாசன், ஈஸ்வரன்.கே, காட்சன் .ஜி, மொஹம்மது அசீம், சரண் .டி, வினோத் .எஸ்.பி, கார்த்திக் சண்முகம் .ஜி (20)

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சசிதேவ். யூ (தக்கவைப்பு), நாராயண் ஜெகதீசன் (தக்கவைப்பு), பிரதோஷ் ரஞ்சன் பால், அபரஜித் .பி, ஹரிஷ்     குமார் .எஸ், சஞ்சய் யாதவ் .ஆர், சதீஷ் .ஆர், ராஹில் எஸ் ஷா, ரோஹித் .ஆர், சிலம்பரசன் .எம், சிபி .ஆர், மதன்குமார் .எஸ், சந்தோஷ் சிவ் .எஸ், விஜு அருள் .எம், லோகேஷ் ராஜ் .டி.டி,ராக்கி .பி, ஐயப்பன் .பி (17)

திண்டுக்கல் டிராகன்ஸ்:

ரவிச்சந்திரன் அஷ்வின் (தக்கவைப்பு), வருண் .சி.வி, இந்திரஜித் .பி, சுபோத் குமார் பாட்டீ, சரவணகுமார் .பி, ஆதித்யா கணேஷ், சிவம் சிங்,  கிஷோர் ஜி, ஹேமந்த் குமார் ஜி, விமல் குமார் ஆர், திரன் .வி.பி, பூபதி வைஷ்ணா குமார், மதிவண்ணன் .எம், தமிழ் திலீபன் .எம். ஈ, அத்வைத் ஷர்மா, ரோஹன் ரவி புத்ரா, சரத் குமார் .சி, அருண் எஸ், விக்னேஷ் பி, அஃபான் காதர் எம் (20)

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:

துஷார் ரஹேஜா (தக்கவைப்பு), விஜய் சங்கர், விவேக் ஆர், அஜித் ராம் .எஸ், சாய் கிஷோர் .ஆர், அனிருத் சீதா ராம், சத்ருவேத் .என். எஸ், பெரியசாமி .ஜி, த்ரிலோக் நாக் ,விஷால் வைத்யா கே, பார்த்தசாரதி ஜி,  ராகுல் ஐயப்பன் ஹரிஷ், கணேஷ் .எஸ், மொஹம்மது அலி .எஸ், மணிகண்டன் எஸ்,ராதாகிருஷ்ணன் எஸ், வெற்றிவேல் ஐ, கருப்புசாமி ஏ

புவனேஷ்வரன் பி, ராகவன் எம் (20)

லைகா கோவை கிங்ஸ்:

சுரேஷ் குமார் ஜெ (தக்கவைப்பு), ஷாரூக் கான் எம் (தக்கவைப்பு), சித்தார்த் எம், சாய் சுதர்ஷன் பி, மொஹம்மது எம், சச்சின் பி,  கெளதம் தாமரை கண்ணன் கே, கிரண் ஆகாஷ் எல், முகிலேஷ் யூ, அதீக் உர் ரஹ்மான் எம்.ஏ, வித்யூத் பி, யுதீஸ்வரன் வி, ராம் அர்விந்த் ஆர், ஹேம்சரண் பி, திவாகர் ஆர், ஜதாவேத் சுப்ரமணியன், சுஜய் எஸ், ஓம் பிரகாஷ் கே.எம் (18)

 நெல்லை ராயல் கிங்ஸ்:

அஜிதேஷ் ஜி (தக்கவைப்பு), கார்த்திக் மணிகண்டன் வி.எஸ்(தக்கவைப்பு), சந்தீப் வாரியர், மோகன் பிரசாத் எஸ், சோனு யாதவ் ஆர், அருண் கார்த்திக் கே.பி,  அஷ்வின் கிரிஸ்ட் ஏ, நிதிஷ் எஸ் ராஜகோபால், ஸ்ரீ நிரஞ்சன் ஆர், மிதுன் ஆர், ரித்திக் ஈஸ்வரன் எஸ், சூர்யபிரகாஷ் எல், கபிலன் என், பொய்யாமொழி எம், ஹரிஷ் என்.எஸ், இமானுவேல் செரியன் பி, ரோகன் ஜெ, சுகேந்திரன் பி, அருண் குமார் எஸ்.ஜே, ஆதித்யா ஏ (20)

சீகம் மதுரை பேந்தர்ஸ்:

கெளதம் வி (தக்கவைப்பு), வாஷிங்டன் சுந்தர் எம்.எஸ், கெளஷிக் ஜெ, ஸ்வப்னில் கே சிங், அஷ்வின் எம், ஹரி நிஷாந்த், ஷிஜித் சந்திரன் பி, ஸ்ரீ அபிஷேக் எஸ், ஆதித்யா வி, குர்ஜாப்நீத் சிங், ஆண்டன் ஆண்ட்ரூ சுபிக்‌ஷன் .எம், தீபன் லிங்கேஷ் கே, சரவணன் பி, கிரிஷ் ஜெயின், ராகுல் டி, சுதன் டி, அஜய் கே கிருஷ்ணன், ஆயுஷ் எம், சூர்யா பி, கார்த்திக் எஸ் (20)

சேலம் ஸ்பார்ட்டன்ஸ்:

கணேஷ் மூர்த்தி எம் (தக்கவைப்பு), கெளஷிக் காந்தி எம், ஜெகநாத் சீனிவாஸ் ஆர்.எஸ் , அபிஷேக் தன்வார், ஆகாஷ் சும்ரா, மான் கே பாஃப்னா, சன்னி சந்து, அபிஷேக் எஸ், முகமது அட்னான் கான், அமித் சாத்விக் வி.பி, கெளரி சங்கர் ஜெ, மோகித் ஹரிஹரன் ஆர்.எஸ், குரு சாயீ எஸ்,செல்வகுமரன் என்,  யுவராஜ் வி, கார்த்திகேயன் ஆர், கவின் ஆர், சச்சின் ரதி, அரவிந்த் எஸ், பிரசாந்த் ஆர் (20)

About Publisher

Check Also

Leading drone company Garuda Aerospace honoured Chennai Super Kings’ Shivam Dube, Deepak Chahar, and Devon Conway and along with them presented Grand National Drone Awards 2023 in 16 categories.

Garuda Aerospace, the leading drone technology and services provider, in association with Chennai Super Kings …