Home / cinema / Cinema News / நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு டீசர் வெளியீடு

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு டீசர் வெளியீடு

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு டீசர் வெளியீடு

நாயகன் கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஜப்பான்’ படத்தின் சிறப்பு டீசரை வெளியிடுவதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெரு மகிழ்ச்சி அடைகிறது.

சமூக அக்கறையுள்ள கதைகளை சுவாரசியமாகச் சொல்லும் திறமை கொண்ட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார்.

தனது பொழுதுபோக்கு மற்றும் தனித்துவமான திரைப்படங்கள் மூலம் மீண்டும் மீண்டும் முத்திரை பதித்து வருகிறார் நடிகர் கார்த்தி. தற்போது தனது 25வது படமான ‘ஜப்பான்’ மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தைத் தரவுள்ளார். அவரது திரைப் பயணத்தின் இந்த புதிய அத்தியாயம் திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தும்படி உருவாகி வருகிறது.

இன்று, (மே 25) நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் தயாரிப்பு நிறுவனம், ஜப்பான் திரைப்படத்தின் சுவாரசியமான சிறப்பு முன்னோட்டத்தை வெளியிடுகிறது.

பரபரப்பான இந்த டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சுனில் இந்தத் திரைப்படம் முலம் தமிழில் அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்திய வெற்றிப் படங்கள் பலவற்றின் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்து வருகிறார். இந்திய சினிமாவின் முக்கியமான, முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களில் ஒருவரான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படக்குழுவினர் உற்சாகமாக படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.

ஜப்பான் பிரம்மாண்ட தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

🔗 https://www.youtube.com/watch?v=NreBfJP5STw

About Publisher

Check Also

Thalapathy69 announcement!

KVN Productions is thrilled to officially announce its upcoming project, Thalapathy-69 as its first Tamil …