ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு, கீழத் தெருவில் இருபிரிவு மக்கள் வாழ்கின்றனர். ஊர் தலைவராக மேலத்தெரு போஸ் (பிரபு) சொல்லுக்கு கட்டுப்பட்டு ஊரார் நடக்கின்றனர். கீழத்தெரு முக்கியஸ்தர் ( இளவரசு) போஸின் நெருங்கிய நண்பராக இருக்கி றார். ஊரார் ஒற்றுமையாக இருப்ப தால் அரசியல்வாதிகளின் அரசியல் எடுபடாமல் போகிறது. ஊரில் தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம் ஊரெங்கும் காடுபோல் வளர்ந்திருக்கும் கருவேல மரம்தான் என்று தெரிய வருகிறது. அந்த மரங்களை வெட்ட ஊரார் முடிவு செய்கின்றனர். ஆனால் அப்பகுதியில் உள்ள கனிம வளங்களை சுரண்ட கார்ப்பரேட்
தலைகள் போலீசை ஏவி முள் செடிகளை வெட்டக்கூடாது என கூறுவதுடன் அங்கு சாதி கலவரத் தைத் தூண்டிவிடுகிறது.
இந்த மோதலுக்கு செங்குட்டுவன் (சாந்தனு) இந்திரா (ஆனந்தி) இளம் ஜோடி காதலே மையமாக கிறது. அதன் பிறகு நடப்பது என்ன? இளம் ஜோடிகள் காதல் என்னவாகிறது? என்ற கேள்வி களுக்கு கிளை மாக்ஸ் பதில் அளிக்கிறது.
முள்ளுக்காடு, மண் மைதானம், புளியமரம். ஊர்பெருசுகள், உடல் கருக்கும் வெயில், கரிமூட்டம் போட்டும் பெரிய அடுப்பு என ராமானாதபுரத்தின் வறண்ட பகுதிக்குள் நம்மையும் ஒரு நபராக கொண்டுபோய் நிறுத்தியிருக் கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.
ஏனாதி கிராம இளைஞனாக மாறியிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். அவர் காட்டியிருக்கும் கடின உழைப்பும் நடிப்பும் குளுகுளு அரங்கிலும் வியர்க்க வைக்கிறது.
நண்பனாக வரும் சஞ்சய் சரவண னுக்கு கூடுதல் இடம் கொடுத்து சில இடங்களில் ஒதுங்கி நிற்கும் சாந்தனு கிளைமாக்ஸ் காட்சி களில் ஸ்கோர் செய்கிறார்.
பங்காளி என்று நண்பன் சஞ்சய் உடன் நெருங்கி பழகும் சாந்தனு ஆனந்தி காதல் விஷயத்தில் கண்டுகொள்ளாதபோல் இருப்பது செயற்கையாக உள்ளது.
பிரபு பஞ்சாயத்து செய்ய அருகில் சாந்தனு கைகட்டி நிற்கும் காட்சி தேவர்மகன் படத்தில் வரும் சிவாஜி, கமல் காட்சியை ஞாபகப் படுத்துகிறது.
ஊரில் போலீஸ் என்கவுன்ட்டர் நடக்கும் நிலையில் சாந்தனுவை தேடிக்கொண்டு ஆனந்தி
இருட்டுக்குள் செல்வது திக் திக் காட்சிகள்.
சாந்தனுவை என்கவுண்ட்டர் செய்தே தீருவேன் என கோபத்தில் பேயாட்டம் போடும் சஞ்சய் திடீரென்று மனம் மாறுவது சினிமாத்தனம்.
போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வேடத்தை கனமாக்குக் கிறார் பிரபு. அவரது உருவ படத்துக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பாடை கட்டி தூ க்கிச் செல்வது, சிலைக்கு செருப்பு மாலை போடுவதெல்லாம் காட்சிக்கு முக்கியம் என்றாலும் அதற்கெல்லாம் அனுமதி கொடுத்த பிரபுவின் தைரியத்தை பாராட்டலாம்.
இளவரசு எதார்த்தம் வேடத்தை நிஜமாக்குகிறது. அரசியல் வாதியாக வரும். பி.எல் தேனப்பன் வில்லத்தனதை சைலன்ட்டாக செய்துமுடிக்கிரார்.
இதுவரை பல படங் களில் சாதி மோதல்கள் கூறப்பட்டிருந்தாலும் இப்படத்தில் எந்த இரு ஜாதிக்குள் மோதல் என்பதை வெளிப்படை யாக காட்டியிருப்பது துணிச்சல் தான். இதற்கு சென்சார் அனுமதி கிடைத்தது பெரிய விஷயம்.
சாந்தனு அக்காவாக வரும் தீபா சங்கர் ஓவர் ஆக்டிங் என்றாலும் அது தேவைப்படுகிறது. கயல் ஆனந்தி காதலில் நடிப்புத்தான் வெளிப்படுகிறது எதார்த்தம் மிஸ்ஸிங்.
மண்ணின் கதையை கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசை விறுவிறுப்பு கூடுகிறது.
வெற்றிவேல் மகேந்திரன் வெப்பமான ஒளிப்பதிவு உடலை வெட்பாக்குகிறது.
பாலு மகேந்திரா பட்டறையிலி ருந்து வந்திருக்கும் மற்றொரு இயக்குனரான விக்ரம் சுகுமாரன் சமுதாய கண்ணோட்டத்துடன் கதை அமைத்திருப்பதும் அதற்கு துணையாக பெரியார் முதல் அம்பேத்கர் வரையிலான சமூகநீதி காவலர்களை துணைக்கு அழைத் திருப்பதும் பலம்.
